தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
2020-11-29@ 16:23:46

சென்னை: தென் தமிழகம், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல், பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு திசையில் நகர்ந்து, வரும் டிசம்பர் 2ம் தேதி தென்தமிழகம் நோக்கி வரக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்கள் மழைபெய்யக்கூடும்.
அதன்படி இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (30ம் தேதி) தென் தமிழகம், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வரும் டிசம்பர் 1ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமான முதல் மிக கனமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழைபெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக் கூடும்.
சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் தென் கிழக்கு வங்ககடல், தென்மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். மேலும் வரும் டிசம்பர் 2ம் தேதிவரை மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் கோவில் சிலைகள் மாயமாவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.. எந்தெந்த கோவில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன?.. ஐகோர்ட் கேள்வி
உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை சட்டமன்ற தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
விபத்து நேரிட்டால் யார் பொறுப்பு?: செங்கல்பட்டில் முதல்வரை வரவேற்று நெடுஞ்சாலையில் அ.தி.மு.க பேனர்கள்..!!
‘திருமண மண்டபம் காணவில்லை’ என போலீசில் புகார்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை!: பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை..!!
நில ஆக்கிரமிப்புகள் தொடர்பான தனி நபர் புகார்களை பொது நல வழக்காக கருத முடியாது...! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!