SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரிமளம் அருகே 60 குரங்குகள் கூண்டில் அகப்பட்டது: மக்களை அச்சுறுத்தியதால் வனத்துறை நடவடிக்கை

2020-11-29@ 14:38:06

திருமயம்: அரிமளம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சுமார் 60 குரங்குகள் பிடிக்கப்பட்டு காட்டுப்பகுதிக்குள் விட்டப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள செங்கீரை கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு கடந்த சில ஆண்டுகளாக அரிமளம் வனப்பகுதியில் உள்ள குரங்குகள் செங்கீரை கிராமத்திற்குள் புகுந்து வீட்டு தோட்டம், வயல் பகுதியில் உள்ள பயிர்களை நாசப்படுத்தி வந்தன. மேலும் ஓட்டு வீடுகளுக்குள் ஓடுகளை உடைத்துக்கொண்டு குரங்குகள் திருடன் போல் இறங்கிய வீட்டிலுள்ள பொருட்களை சூறையாடி வந்ததால் அப்பகுதி மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

இதனை கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் தோல்வியில் முடிந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதிக்கு சென்றவர்களை குரங்கு கடித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் செங்கீரை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் குரங்கு பிடிப்பவர்களை வரச்செய்து கூண்டு அமைத்தனர். அப்போது அங்கு சுற்றித் திரிந்த சுமார் 60 குரங்குகள் கூண்டின் உதவியுடன் பிடிக்கப்பட்டு பூலாங்குறிச்சி அருகே உள்ள வனத்துறைக்கு சொந்தமான மணல் மலை வனப்பகுதியில் விடப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • asusiiiee_dravviii1

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்