இன்று மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை: காலை 11 மணிக்கு மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை.!!!
2020-11-29@ 09:08:56

டெல்லி: கொரோனா பாதிப்புக்கு இடையே மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாற்றும் வகையில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கினார். இந்தியாவின் பெரும்பான்மையாக மக்களிடம் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் வகையில், வானொலி வாயிலாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அகில இந்திய வானொலி மூலமாக முதல் முறையாக 2014 விஜயதசமியன்று (அக்டோபர் 03) தனது முதல் உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சியை 2019 ஜூன் 30-ம் தேதி மீண்டும் தொடங்கினார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று நவம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் உரையாற்றுகிறார்.
இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களுடன் உரையாடுகிறார். இன்று திருக்கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருக்கார்த்திகை தீபம் குறித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று 71-வது முறையாக உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பதிவிறக்கம் : முடங்கியது ‘சிக்னல்’ செயலி
1966 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வெளிநாட்டு தலைவர் பங்கேற்காத முதல் குடியரசு தின விழா : 25,000 பேர் மட்டுமே பங்கேற்பு
குறுகிய காலத்தில் தடுப்பூசி கண்டுபிடித்து சாதனை படைத்த இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு தலை வணங்குகிறேன் : பிரதமர் மோடி பெருமிதம்
உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தை இந்தியாவில் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!!
இந்தியாவில் குறையும் கொரோனா தாக்கம் : சிகிச்சை பெறுவோர் விகிதம் 2% ஆக சரிந்தது... குணமடைந்தோர் விகிதமும் 97%-ஐ நெருங்கியது
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது : மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்