SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கம் விலை தொடர்ந்து சரிவு ஒரு வாரத்தில் ரூ.1,392 குறைந்தது: நகை வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம்

2020-11-29@ 02:06:06

சென்னை: தங்கம் விலை 6வது நாளாக நேற்று சரிவை சந்தித்தது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. விலை குறைந்து வருவதால் மக்கள் நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. தங்கம் விலையில் கடந்த 3 மாதங்களாக ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 23ம் தேதி முதல் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. 23ம் தேதி ஒரு சவரன் ரூ.37,984, 24ம் தேதி ரூ.37,120, 25ம் தேதி ரூ.36,912, 26ம் தேதி ரூ.36,904க்கும் விற்கப்பட்டது. 5வது நாளாக நேற்று முன்தினம் ரூ.24 குறைந்து ஒரு கிராம் ரூ.4,589க்கும், சவரனுக்கு ரூ.192 குறைந்து ஒரு சவரன் ரூ.36,712க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் 6வது நாளாக நேற்றும் தங்கம் விலை சரிவை சந்தித்தது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.4,574க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.36,592க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 6 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1,392 அளவுக்கு குறைந்துள்ளது. ஜெட் வேகத்தில் கடந்த காலத்தில் அதிகரித்து வந்த தங்கம், தற்போது தொடர்ச்சியாக குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் விலை குறைவால் நகை வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். இதனால், நேற்றைய விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனையாகும். நாளை மார்க்கெட் தொடங்கிய பிறகே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-01-2021

    18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்