நாட்டை சர்வாதிகார நிலைக்கு கொண்டு செல்ல பாஜ முயற்சி: முத்தரசன் பரபரப்பு குற்றச்சாட்டு
2020-11-29@ 01:09:19

திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என இறுதியில் ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்கிற சர்வாதிகார நிலைக்கு நாட்டை கொண்டு செல்ல மத்திய பாஜக ஆட்சி தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்து. இதை முறியடிக்க கூடிய வகையில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும்.மருத்துவ மேற்படிப்பிற்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த முடியாது என்பது சமூக நீதிக்கு எதிரானது. இதை எதிர்த்தும் மக்கள் போராட வேண்டும்.
ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது. நாடு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடத்துவதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது என பிரதமர் கூறுவது வெறும் காரணங்கள்தான். ஆனால், அவர்களின் நோக்கம் என்பது வேறு. தங்களுக்கு எதிரான மத்திய அரசின் யுத்தத்திற்கு எதிராக விவசாயிகள் போராடுகிறார்கள். விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டங்கள் தொடரும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.
Tags:
Country dictatorial position go BJP attempt Mutharajan agitation charge நாட்டை சர்வாதிகார நிலை செல்ல பாஜ முயற்சி முத்தரசன் பரபரப்பு குற்றச்சாட்டுமேலும் செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணியில் இ.யூ.மு.லீ 3; மமக 2 தொகுதிகள் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.!!!
தமிழக சட்டமன்ற தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்க வரும் 3-ம் தேதி கடைசி நாள்...ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு.!!!!
மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: ராகுல் காந்தி அழைப்பு
தமிழக அரசியலில் பாஜகவின் பங்கு முக்கியமானது; பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாதிக்காது: எல்.முருகன் பேட்டி
அதிமுக கூட்டணியில் விரிசல்?.. மக்கள் நீதி மய்யம் அல்லது அமமுக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?.. பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை
தமிழகம் நாட்டின் வழிகாட்டி; காமராஜர் முயற்சியால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டம்: ராகுல் காந்தி பேச்சு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்