தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு கர்நாடகா முதல்வரின் செயலாளர் தற்கொலை முயற்சி : கர்நாடகா போலீசார் விசாரணை
2020-11-28@ 15:08:51

பெங்களூரு,கர்நாடகா முதல்வரின் செயலாளர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உறவினரும், அரசியல் செயலாளரான என்.ஆர்.சந்தோஷ், கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார். இவர், பெங்களூருவில் உள்ள டாலர் காலனியில் நேற்று முன்தினம் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயக்க நிலையில் இருந்த அவரை மீட்டு, பெங்களூருவில் உள்ள ராமையா நினைவு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்த போலீசாரும் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. தற்போது, மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ‘சந்தோஷின் குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவேன். தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஏன் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை. தற்ேபாது நலமுடன் உள்ளார். கவலைப்பட வேண்டியதில்லை. இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, தற்போது, மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்’ என்றார். தற்கொலைக்கு முயன்ற சந்தோஷ், அப்போதைய முதல்வர் சித்தராமையா ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் முதல்வர் எடியூரப்பாவுடன் செயல்பட்டார். மாநிலத்தில் ‘ஆப்ரேஷன் தாமரை’ மற்றும் பாஜக ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
மேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய விளம்பர பதாகைகளை 72 மணி நேரத்திற்குள் அகற்ற உத்தரவு!!
ஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிபல் வனப்பகுதியில் தொடரும் காட்டுத்தீ!: விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பட்நாயக் உத்தரவு..!!
பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!: டாப்ஸி, காஷ்யப் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்..!!
தொடர்ந்து குறையும் குணமடைந்தோர் விகிதம்... தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் 100க்கு கீழே சென்றது : இந்தியாவில் கொரோனா நிலவரம்!!
100வது நாளை எட்டியது டெல்லி விவசாயிகளின் போராட்டம் : தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய முடிவு!!
விலங்குகளையும், அவற்றிற்கான வாழ்விடங்களையும் உறுதிப்படுத்த வேண்டும்..! உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்