3வது நாளாக டெல்லிக்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள்... வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு!!
2020-11-28@ 12:37:36

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் 3வது நாளாக போராட்டத்தை தொடர்கின்றனர். பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகரை நோக்கி படையெடுத்து வருவதால் பதற்றம் நீடிக்கிறது. விவசாயிகளுக்கு பாதகம் ஏற்படுத்தும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதிலும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, 27, 28ம் தேதிகளில் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை பஞ்சாப் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. இதற்காக நேற்று முன்தினம் டெல்லியை நோக்கி பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் ஆயிரக்கணக்கில் புறப்பட்டனர். அவர்களை எல்லையில் தடுத்து நிறுத்திய போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். எனினும் கலைந்து செல்ல மறுத்து விவசாயிகள் 2வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.
விடாப்பிடியாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்ததால் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் காவல்துறை டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதித்தது. இந்த நிலையில், தொடர்ந்து 3வது நாளாக புராரியில் உள்ள நிரான்காரி மைதானத்தில் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர். மைதானத்தில் இருந்தவாறு மத்திய அரசை கண்டித்து மேளம் தட்டி, பாட்டு பாடியும் முழக்கங்களை எழுப்பியும் விவசாயிகள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் கைவிடப்படாது என்று திட்டவட்டமாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பஞ்சாப், ஹரியானா விவசாயிகளோடு, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்தும் போராட்டத்தில் பங்கேற்க டெல்லியை நோக்கி விவசாயிகள் பயணிக்கின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகரை நோக்கி படையெடுப்பதால் பஞ்சாப், ஹரியானா போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தை கைவிடும் படி கேட்டுக் கொண்ட மத்திய வேளாண்துறை அமைச்சர் வரும் 3ம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
1966 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வெளிநாட்டு தலைவர் பங்கேற்காத முதல் குடியரசு தின விழா : 25,000 பேர் மட்டுமே பங்கேற்பு
குறுகிய காலத்தில் தடுப்பூசி கண்டுபிடித்து சாதனை படைத்த இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு தலை வணங்குகிறேன் : பிரதமர் மோடி பெருமிதம்
உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தை இந்தியாவில் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!!
இந்தியாவில் குறையும் கொரோனா தாக்கம் : சிகிச்சை பெறுவோர் விகிதம் 2% ஆக சரிந்தது... குணமடைந்தோர் விகிதமும் 97%-ஐ நெருங்கியது
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது : மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!!
கோவின் செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு அறிவிப்பு!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்