கிராம மக்கள் சாலை மறியல்
2020-11-28@ 01:57:59

செய்யூர்: செய்யூர் அடுத்த இடைகழிநாடு பேரூராட்சியில் நைனார் குப்பம், ஓதியூர், முட்டுக்காடு, பனையூர் குப்பம், தழுதாலி குப்பம், முதலியார் குப்பம் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு நல்லூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கப்படுகிறது.இந்நிலையில், கடந்த 25ம் தேதி ஏற்பட்ட புயலால் அன்று இரவு கிராமங்களுக்கான மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. புயல் கரையை கடந்து 2 நாட்களாகியும் மின் வினியோகம் வழங்கவில்லை. தொடர் மின்தடையால் இங்கு வசிக்கும் முதியோர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.
இதையடுத்து, மின் இணைப்பை வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், பொதுமக்கள் பலமுறை முறையிட்டும், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மாலைஈசிஆர் சாலையில் எல்லையம்மன் கோயில் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து செய்யூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, உடனே மின் வினியோகம் செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், சுமார் அரைமணி நேரம் போக்குவரத்தும் பாதித்தது.
மேலும் செய்திகள்
தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : வானிலை ஆய்வு மையம் தகவல்
முனியாண்டி கோயில் திருவிழா :100 கிடாய்கள் வெட்டி அன்னதானம்
மீண்டும் முதல்வர் எடப்பாடி தானாம் : கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு குவிந்த மக்கள்: விலை உயர்வு
திருச்சுழி தாலுகாவில் தொடர்மழை 5000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்
கரூர் சுக்காலியூர் அருகே சரிந்து விழுந்தது மின்கம்பங்கள்: கரன்ட் இல்லாமல் மக்கள் கடும் அவதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்