சேக்காடு ஏரியில் தொழிலாளி சடலம் மீட்பு
2020-11-28@ 01:56:42

ஆவடி: ஆவடி அடுத்த சேக்காடு மேட்டு தெருவை சேர்ந்தவர் திருப்பதி(55). கூலி தொழிலாளி. இவர், தனது மகன் மணிகண்டனுடன் வசித்து வந்தார். இதற்கிடையில், கடந்த 23ம் தேதி திருப்பதி சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்டு உள்ளார். பின்னர், அவர் அங்கு செல்லவில்லை. இந்நிலையில், நேற்று காலை ஆவடி அருகே சேக்காடு ஏரியில் ஒரு சடலம் மிதப்பதாக ஆவடி போலீசாருக்கு தகவல் இருந்தது.
இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, ஏரியில் இறந்தவர் மாயமான திருப்பதி என்பது தெரியவந்தது. மேலும், இவரது சடலம் அழுகிய நிலையில் இருந்தது. இதனையடுத்து, போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பதி ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா என விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
ரயில் மோதி இருவர் பலி
பெரியபாளையம் காவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
திருவள்ளூர் பகுதிகளில் கோடைக்கு முன்பே அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் விரக்தி
தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை உடைந்த விவகாரம் தலைமை பொறியாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்: தமிழக அரசு நடவடிக்கை
திமுக ஆட்சிக்கு வரும்: முதல்வர் எடப்பாடி பிரசாரத்தால் அதிமுகவினர் அதிர்ச்சி
ரூ.1 லட்சம் குட்கா மினி லாரியுடன் பறிமுதல் டிரைவர் கைது
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்