ஐதராபாத்தில் 5 தியேட்டர்கள் நிரந்தரமாக மூடல்
2020-11-28@ 01:51:44

கொரோனா தாக்கம் காரணமாக திரையுலகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் தியேட்டர் தொழில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் சமீபத்தில் மட்டும் அபிராமி, ஏவிஎம் ராஜேஸ்வரி, மகாராணி, அகஸ்தியா ஆகிய 4 தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்பட்டன. இப்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, நாடு முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் படம் பார்க்க மக்கள் வருவதில்லை. இதனால் பல தியேட்டர்கள் நிரந்தரமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் ஒரே சமயத்தில் 5 தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. சாந்தி மற்றும் கேலக்ஸி தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன. இதேபோல் பகதூர்புராவில் ரமா, ஆர்டிசிஎக்ஸ் சாலையில் மயூரி, மெஹதிபட்டினத்தில் அம்பா ஆகிய தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் இந்த ஐந்து தியேட்டர்களும் இந்த வாரத்தில் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 55 தியேட்டர்கள் மூடல்
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு 700 தியேட்டர்கள் வரை திறக்கப்பட்டன. எதிர்பார்த்த மக்கள் கூட்டம் வராததால் தமிழகம் முழுவதும் 55 தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள தேவி காம்ப்ளக்சில் படம் பார்க்க ரசிகர்கள் வராததால், நேற்று மட்டும் 4 திேயட்டர் களில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்
இனிமேல் ‘நெட்ஒர்க்’ பிரச்னை இருக்காது... கிராமங்களுக்கும் வருகிறது ‘ரயில்டெல்’ சேவை : மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில் பிப்ரவரி 5ல் இளவரசியும் விடுவிக்கப்படுகிறார் என தகவல்
டிராக்டர் பேரணி!: தலைநகரில் யாரை அனுமதிக்கலாம்; அனுமதிக்கக்கூடாது என்று டெல்லி போலீஸ்தான் முடிவு செய்ய வேண்டும்..உச்சநீதிமன்றம்
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!: காவேரி - குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து பேச இருப்பதாக தகவல்..!!
புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் தொடங்கியது!: புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டம்..!!
தாண்டவ் வெப் சீரிஸ்!: இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தியதற்கு எதிர்ப்பு..அமேசான் பிரைமிற்கு தகவல் ஒளிபரப்புத்துறை நோட்டீஸ்..!!
18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்