திமிங்கலமும் முதலையும் நேருக்கு நேர் சந்தித்தால்...
2020-11-28@ 00:56:10

மெல்போர்ன்: கடலில் வாழும் ‘புல் ஷார்க்’ எனப்படும் சுறாக்கள் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானவை. கடல் பகுதியில் மனிதர்களை கண்டால் சும்மா விடாது. இப்படிப்பட்ட ஆபத்தான சுறா, முதலையை நேருக்கு நேர் சந்தித்தால் என்னவாகும்? இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த செல்சியா, பிரைஸ் ஆகிய இருவரும் கண்டறிந்துள்ளனர். குன்னன்ரா என்ற இடத்தில் தங்களின் டிரோன் கேமராவை கடலின் மேல் நிலை நிறுத்தி, ஏதாவது விநோத சம்பவம் நடக்கிறதா என இவர்கள் கண்காணித்துள்ளனர்.
அப்போது, அங்கு 16 அடி நீள பெரிய முதலை ஒன்று நின்றிருக்க, அதனை நோக்கி புல் ஷார்க் வேகமாக வந்துள்ளது. சண்டைக்கு தயாராக சுறா வேகமாக முன்னேறி வர, முதலை அமைதியாக காத்திருந்தது. இரு ஆபத்தான விலங்குகளின் சண்டை சுவாரஸ்யமாக இருக்குமென எதிர்பார்த்த நிலையில், முதலையின் சைசை பார்த்த சுறா, சற்று தயங்கி தனது பாதையை மாற்றி நழுவியது. பின்னர், எதுவும் தெரியாதது போல வேறு வழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என நீந்தி மறைந்தது. இந்த வீடியோ யூடியூப்பில் வைரலாகி உள்ளது.
மேலும் செய்திகள்
நாயிடம் பால் குடிக்கும் பூனைக்குட்டி..! வைரலாகும் வீடியோ...
இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ஆவலாக இருந்தேன்...ஆனால் கொரோனா என்னை தடுத்துவிட்டது : இங்கிலாந்து பிரதமர் உருக்கம்
உருமாறிய கொரோனாவையும் எதிர்க்கும்...! தற்போதுள்ள தடுப்பூசியை மேலும் வீரியம் மிக்கதாக உருவாக்க பரிசோதனைகள்: மாடர்னா நிறுவனம்
உலகத்தை மிரட்டி வரும் கொரோனா..! பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21.48 லட்சம் பேர் உயிரிழப்பு
ஒரே நேரத்தில் 143 செயற்கைகோளை ஏவி உலக சாதனை படைத்தது ஸ்பேஸ்எக்ஸ்
அதிகார மோதலின் உச்சகட்டம் : ஆளும் கட்சியில் இருந்து நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நீக்கம்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!