குஜராத் மருத்துவமனையின் கொரோனா வார்டில் தீ 5 நோயாளிகள் கருகி பலி: 5வது முறையாக பயங்கரம்
2020-11-28@ 00:53:34

குஜராத்: குஜராத் மாநிலம், ராஜ்காட்டில் உள்ள சிவானந்த் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 33 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென தீ பரவியது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும், ஊழியர்களும் மீட்கப்பட்டனர். எனினும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 5 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீட்கப்பட்ட நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைக்கு முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ராஜ்காட் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தால் அன்புக்குரியவர்களை இழந்து வரும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,’ என கூறியுள்ளார். குஜராத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் கடந்த ஆகஸ்டில் இருந்து ஏற்கனவே 4 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்தது 5வது சம்பவமாகும். அகமதாபாத்தில் கடந்த ஆகஸ்டில் நடந்த தீ விபத்தில் 8 நோயாளிகள் கருகி பலியாகினர்.
மேலும் செய்திகள்
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லையில் சீனா ஊடுருவ முயற்சி?.. கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதாக தகவல்
ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் கட்டணம் திடீர் உயர்வு: இந்திய ரயில்வே அறிவிப்பு
மீனவர்களுக்கு தேவை தனி அமைச்சகமே தவிர, மற்றோரு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறை அல்ல... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதில்
நாட்டில் உள்ள அனைத்தையும் விற்கும் மோடி அரசு: இந்த மத்திய அரசால் மக்களை கொடூரமாக சுரண்ட மட்டுமே முடியும்: மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்
தங்கம் போல் உயரும் பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசை கண்டித்து எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மே.வங்க முதல்வர் மம்தா.!!!!
சர்ச்சைக்குரிய காட்சிகளை அரசு அல்லது நீதிமன்றம் நீக்க உத்தரவிட்டால் 36 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும்: OTT தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்