பலத்த மழை எதிரொலி: சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு
2020-11-27@ 21:01:50

வத்திராயிருப்பு: பலத்த மழை எதிரொலியாக, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதன்படி, இன்று (நவ. 27) பிரதோஷம், 29ம் தேதி கார்த்திகை மாத பவுர்ணமி ஆகிய நாட்களில் கோயிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் வருவர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு சுற்றுவட்டாரம் மற்றும் சதுரகிரி கோயில் மலைப்பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. மேலும், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 29ம் தேதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சதுரகிரி கோயில் பகுதிகளிலும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதால், இன்று (நவ. 27) முதல் நவ. 30ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய, கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை தடை விதித்துள்ளது.
இருப்பினும் வெளியூர்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று அதிகாலை வந்தனர். இவர்களை தாணிப்பாறையில் வனத்துறை கேட் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லாததால் வனத்துறை கேட் முன்பு சூடமேற்றி வழிபட்டுவிட்டு பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். 5 இடங்களில் செக்போஸ்ட் தடை மீறி பக்தர்கள் கோயிலுக்கு செல்வதை கண்காணிக்க மகாராஜபுரம் விலக்கு பகுதியில் 2 இடங்கள், தாணிப்பாறை விலக்கு, வனத்துறை கேட் பகுதியில் 2 இடங்கள் என மொத்தம் 5 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ராமதாசின் சகோதரர் காலமானார்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார துறை செயலாளர்
தமிழக - கர்நாடக எல்லையில் மீண்டும் பெயர் பலகைகள் சேதம்
மதுரையில் நடந்த திருமணத்தில் புதுமுயற்சி ‘க்யூ.ஆர் கோடை’ ஸ்கேன் செய்தால் மொய் பணம் அக்கவுன்ட்டில் ஏறும்
புதுச்சேரி பாஜ நியமன எம்எல்ஏ சங்கர் மாரடைப்பால் மரணம்
கன்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த யானை சாவு
18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்