SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழைவிட்டு 2 நாட்களாகியும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வடியாததால் பயணிகள் அவதி

2020-11-27@ 20:57:22

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக விழுப்புரத்தில் 276 மி.மீட்டர் மழை கொட்டித் தீர்த்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. தற்போது, படிப்படியாக மழைநீர் வடிந்து வரும் நிலையில் விழுப்புரம் நகரில் மழை நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் முழுவதும் 3 அடிக்கு மேல் மழைநீர் சூழ்ந்துள்ளது.

மழை நின்று 2 நாட்களாகியும் பேருந்து நிலையத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றவில்லை. நிவர் புயலால் ரத்து செய்யப்பட்ட பேருந்துகள் 2 நாட்களுக்கு பிறகு இன்று வழக்கம்போல் இயக்கப்படும் நிலையில் பஸ் நிலையம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பயணிகள் அவதியடைந்தனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் பேருந்து நிலையத்தின் வெளியே சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:

மழை

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-01-2021

    18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்