இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி
2020-11-27@ 17:51:03

சிட்னி: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரோன் பிஞ்ச் 114 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்ன் 69 ரன்களும், க்ளென் மேக்ஸ்வெல் 45 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகள், பும்ரா 1, சைனி 1, சாஹல் 1 விக்கெட் வீழ்த்தினர்.
375 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அகர்வால் 22, தவான் 74, விராத் கோலி 21, ஸ்ரேயாஸ் ஐயர் 2, கே.எல்.ராகுல் 12, ஹர்திக் பாண்டியா 90, ஜடேஜா 25, சைனி 29, முகமது ஷமி 13 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 1, ஹஸ்ட்லேவூட் 3, சம்பா 4 விக்கெட் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ஹர்திக் பாண்டியா சாதனை:
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1,000 ரன்களை கடந்த இந்தியர் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார். உலக அளவில் இச்சாதனையை படைத்தவர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா 5வது இடத்தில் உள்ளார்.
மேலும் செய்திகள்
பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து
கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்... நடராஜன் உற்சாக பேட்டி
இலங்கை முன்னிலை பெற வாய்ப்பு: எம்புல்டெனியா அபார பந்துவீச்சு
சேப்பாக்கத்தில் 2 டெஸ்ட் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வருகை
திருவில்லிபுத்தூரில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!