இந்திய நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகையுடன் கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரரால் பரபரப்பு
2020-11-27@ 16:41:58

சிட்னி: ஆஸ்திரேலியா - இந்தியா முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதானத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. போட்டியின் போது அங்கு நிலக்கரி சுரங்கம் நடத்தும் அதானி நிறுவனத்திற்கு எதிராக 2 பேர் மைதானத்திற்குள் நுழைந்து பதாகைகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரின் பதாகையில் அதானி குழுமத்திற்கு எதிராக 'NO $1BN ADANI LOAN' என்று எழுதப்பட்டு இருந்தது. எதிர்ப்பாளர்களின் டி-ஷர்ட்டின் முன்புறம் “ஸ்டாப் அதானி” எழுதப்பட்டு இருந்தது. பின்புறம் “ஸ்டாப் நிலக்கரி” என்று இருந்ததது. போராட்டக்காரர்களில் ஒருவர் மைதானத்திற்குள் ஊடுருவி பதாகையை ஏந்தியபடி ஆடுகளத்திற்கு ருகில் ஓடினார். இரு போராட்டக்காரர்களையும் பாதுகப்பு வீரர்கள் வெளியே அழைத்துச் சென்றனர்.
மேலும் செய்திகள்
நாயிடம் பால் குடிக்கும் பூனைக்குட்டி..! வைரலாகும் வீடியோ...
இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ஆவலாக இருந்தேன்...ஆனால் கொரோனா என்னை தடுத்துவிட்டது : இங்கிலாந்து பிரதமர் உருக்கம்
உருமாறிய கொரோனாவையும் எதிர்க்கும்...! தற்போதுள்ள தடுப்பூசியை மேலும் வீரியம் மிக்கதாக உருவாக்க பரிசோதனைகள்: மாடர்னா நிறுவனம்
உலகத்தை மிரட்டி வரும் கொரோனா..! பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21.48 லட்சம் பேர் உயிரிழப்பு
ஒரே நேரத்தில் 143 செயற்கைகோளை ஏவி உலக சாதனை படைத்தது ஸ்பேஸ்எக்ஸ்
அதிகார மோதலின் உச்சகட்டம் : ஆளும் கட்சியில் இருந்து நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நீக்கம்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!