ஸ்ரீநகரில் பரபரப்பான பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் 2 ராணுவ வீரர்கள் பலி
2020-11-27@ 00:46:37

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஸ்ரீநகரில் பரிம்போராவின் புறநகர்ப் பகுதியான குஷிபோராவில் பாதுகாப்பு படையை சேர்ந்த அதிவிரைவுப் படை வீரர்கள் நேற்று பிற்பகல் வேனில் சென்று கொண்டிருந்தனர். மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் வேன் வந்தபோது, காரில் இருந்த 3 பேர் வேனை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில், படுகாயமடைந்த 2 வீரர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால், பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தவில்லை. வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டிருந்தால், பொதுமக்கள் தரப்பில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
ஆனாலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவதற்காக அந்த பகுதி முழுவதையும் பாதுகாப்புப் படைகள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தீவிரவாதிகளை பிடிக்க, தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்நிலையில், காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் செல்லும் காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதை போலீசார் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி ஜம்மு காஷ்மீர் ஐஜி விஜயகுமார் கூறுகையில், ‘‘‘காரில் வந்த 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், ஒருவர் காஷ்மீரைச் சேர்ந்தவர். லஷ்கர் இ தொய்பா அல்லது ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம். அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள்,’’ என்றார்.
Tags:
Area in Srinagar militant attack 2 soldiers killed ஸ்ரீநகரில் பகுதி தீவிரவாதிகள் தாக்குதல் 2 ராணுவ வீரர்கள் பலிமேலும் செய்திகள்
வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதின் விளைவு!: 17 கோப்புகளில் கையெப்பம் இட்டார் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி..!!
எல்லையில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
பனிமூட்டத்தால் மேற்கு வங்கத்தில் விபத்து: உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவு!!
டிராகன் பழ வகைக்கு கமலம் என பெயர் மாற்றம் செய்தது குஜராத் அரசு... அரசியல் ஏதும் இல்லை என முதல்வர் விளக்கம்!!
தீர்வு எட்டப்படுமா?: டெல்லியில் விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையேயான 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது..!!
பேரறிவாளனை விடுவிப்பது பற்றி குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்..! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!