சீன பொருட்களுக்கு தடை, உலோக விலை உயர்வால் டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி விலை அதிகரிக்கும் அபாயம்: வாகனங்களும் தப்பவில்லை
2020-11-27@ 00:46:19

புதுடெல்லி: ஸ்டீல், தாமிரம், அலுமினியம் உட்பட உலோகங்கள் விலை அதிகரிப்பு மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய தடையால், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கச்சா எண்ணெய் விலை 16.5 சதவீதம், பாமாயில் விலை 9 முதல் 15 சதவீதம் என அதிகரித்துள்ளது. இதுபோன்ற விலை உயர்வுகள் பொதுமக்களை நேரடியாக பாதித்து வருகின்றன. இதுபோல், கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட உலோகங்களின் விலை உயர்வும், நுகர்வோர் தலையில்தான் விடிய இருக்கிறது. அதாவது, ஸ்டீல், அலுமினியம், தாமிரம், துத்தநாகம், காரீயம் ஆகிய முக்கிய உலோக பொருட்களின் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 5 முதல் 11 சதவீதம் அதிகரித்து விட்டது.
இதனால், ஆட்டோமொபைல் துறையில் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் விலை சில உயர்ந்து வருகின்றன. அசோக் லேலண்ட் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரையிலும், டிவிஎஸ் மோட்டார்ஸ் சுமார் 1 சதவீதம் வரையிலும் விலையை உயர்த்தியுள்ளன. இதைத் தொடர்ந்து வீட்டு உபயோக பொருட்கள் விலையும் உயர உள்ளது. இதுகுறித்து உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சில உதிரி பாகங்களுக்கு சீனாவைத்தான் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. மத்திய அரசின் தடையால் இவற்றை இறக்குமதி செய்ய இயலவில்லை.
ஆனால் லேப்டாப், டிவி, வாஷிங் மெஷின் தேவைகள் அதிகமாகவே உள்ளன. உலோக மூலப்பொருட்கள் மற்றும் சில உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்து விட்டது. பண்டிகை சீசனில் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு விலை உயர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து இந்த பளுவை தாங்க முடியாது. இன்னும் ஒரு மாதத்திலேயே கூட இந்த விலை உயர்வு இருக்கலாம். ஏசிக்களுக்கு 2 சதவீதம் வரை விலை உயர்வு உட்பட, டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விலை 3 முதல் 5 சதவீதம் வரை உயரலாம். ஒரு மாதத்திலேயே கூட இந்த விலை உயர்வு அமலுக்கு வரலாம் என்றனர்.
Tags:
Ban on Chinese goods rising metal prices TV bridge washing machine AC prices rising risk vehicles do not escape சீன பொருட்களுக்கு தடை உலோக விலை உயர்வால் டிவி பிரிட்ஜ் வாஷிங்மெஷின் ஏசி விலை அதிகரிக்கும் அபாயம் வாகனங்களும் தப்பவில்லைமேலும் செய்திகள்
அட்டகாசமான விலை சரிவு... சவரன் ரூ.256 குறைந்து ரூ.34,648க்கு விற்பனை.. இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல்!!
நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதத்திலேயே 66 சதவீதத்தை தாண்டியது நிதிப்பற்றாக்குறை
பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு: முதலீட்டாளர்களுக்கு 5.37 லட்சம் கோடி இழப்பு
பங்குசந்தையில் சென்செக்ஸ் 1,200 புள்ளிகள், நிஃப்டி 360 புள்ளிகள் சரிவு
35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912-க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
ஏழை, நடுத்தர மக்களுக்கு அடுத்த அடி...! ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 விலை உயர்வு
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!