SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

சிட்னியில் முதல் ஒரு நாள் போட்டி; இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல்: வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?

2020-11-26@ 15:42:58

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. இரு அணிகள் இடையே 3 ஒரு நாள்,  3 டி.20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது. ஐபிஎல் தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி துபாயில் இருந்து நேரடியாக சிட்னி சென்றடைந்தது. அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வீரர்கள் ஜிம் மற்றும் ஓட்டலையொட்டி மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். ரோகித்சர்மா இல்லாத நிலையில் தவானுடன் மயங்க் அகர்வால் களம் இறங்குவார் என தெரிகிறது. மிடில் ஆர்டரில் கேப்டன் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் இடம்பெறுவர்.

ஆல்ரவுண்டர்கள் ஹர்த்திக்பாண்டியா, ஜடேஜாவுக்கு இடம் கிடைக்கும். பாண்டியா ஐபிஎல்லில் பந்துவீசாத நிலையில் ஆஸி. தொடரில் பந்துவீசுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வேகப்பந்து வீச்சில் பும்ரா, ஷமியுடன் சைனியும், சுழலில் சஹாலும் இடம்பெறலாம். மறுபுறம் கடந்த முறை தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணியில் இந்த முறை வார்னர், ஸ்மித் பேட்டிங்கில் வலுசேர்ப்பர். கேப்டன் பிஞ்ச், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டோனிஸ் ஆகியோர் இடம்பெறலாம். பந்துவீச்சில் ஸ்டார்க், ஹேசல்வுட், பேட்கம்மின்ஸ் மற்றும் சுழலில் ஸம்பாவுக்கு இடம் கிடைக்கும்.

கம்மின்ஸ்சுக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில் சீன் அபேட் அல்லது ஆண்ட்ரூ டை களம் இறங்கலாம். இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இருப்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மைதானத்தில் குறைந்த அளவிலான ரசிகர்களே அனுமதிக்கப்படுவர். பகலிரவு ஆட்டமான இது இந்திய நேரப்படி நாளை காலை 9.10 மணிக்கு தொடங்கி நடக்கும். சோனி சிக்ஸ், மற்றும் சோனி டென் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 1992ம் ஆண்டு உலக கோப்பையில் ஆடிய ஜெர்சியில் இந்தியா களம் இறங்குவது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

சிட்னியில் எப்படி?
சிட்னியில் இதுவரை ஆஸ்திரேலியா 132 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 87ல் வெற்றி, 39ல் தோல்வி கண்டுள்ளது. 6 போட்டி கைவிடப்பட்டுள்ளது.  இந்தியா இங்கு 20 போட்டியில் ஆடி 5ல் வென்றுள்ளது. 14ல் தோல்வியும் ஒரு போட்டி ரத்தும் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதிய 17 போட்டிகளில் 2ல் மட்டுமே வென்றுள்ளது. ஒரு போட்டி ரத்தாகி உள்ள நிலையில் மற்ற 14 போட்டிகளில் ஆஸி. வென்றுள்ளது.

இதுவரை நேருக்கு நேர்....
ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 140 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்தியா 52 , ஆஸ்திரேலியா 78 போட்டிகளில் வென்றுள்ளன. 10 போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டிகளில் இந்தியா 3, ஆஸ்திரேலியா 2ல் வென்றுள்ளன. ஆஸ்திரேலிய மண்ணில் இரு அணிகளும் சந்தித்த 51 ஒரு நாள் போட்டிகளில் 36ல் ஆஸ்திரேலியாவும், 13ல் இந்தியாவும் வெற்றி கண்டுள்ளன. 2 ஆட்டத்தில் முடிவில்லை.

அதிக ரன், சதம், விக்கெட்....
* ஆஸி.க்கு எதிராக இந்தியா பெங்களூருவில் 2013 நவ.2ம் தேதி 383/6 ரன் எடுத்ததே அதிகபட் சரன். ஆஸ்திரேலியா 2019 மார்ச்.10ம் தேதி மொகாலியில் 359/6 ரன் எடுத்தது தான் அதிகம்.
* இந்தியா சிட்னியில் 1981ல் 63 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ரன். ஆஸி. 1991ல் பெர்த்தில் 101 ரன்னில் சுருண்டுள்ளது.
* ஆஸி.க்கு எதிராக டெண்டுல்கர் 71 போட்டிகளில் 9 சதத்துடன் 3077 ரன் எடுத்துள்ளார். ஆஸி. தரப்பில் பாண்டிங் இந்தியாவுடன் 59 போட்டியில் 6 சதத்துடன் 2164 ரன் எடுத்துள்ளார்.

* ஒரு போட்டியில் ரோகித்சர்மா 209 ரன் (பெங்களூருவில் 2013,நவ.1) எடுத்தது தான் பெஸ்ட். ஆஸி தரப்பில் பெய்லி நாக்பூரில் (2013.அக்.30) 156 ரன் எடுத்தது தான் அதிகம்.
* டெண்டுல்கர் 9, கோஹ்லி, ரோகித்சர்மா தலா 8 சதம் அடித்துள்ளனர். ஆஸி. தரப்பில் பாண்டிங் 6, ஸ்மித்,வார்னர் தலா  3 சதம்அடித்துள்ளனர்.
* பந்துவீச்சில் இந்தியாவுக்கு எதிராக பிரட்லீ 32 போட்டிகளில் 55 விக்கெட்டும், கபில்தேவ் 41 போட்டிகளில் 45 விக்கெட்டும் எடுத்து டாப்பில் உள்ளனர்.

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்