2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வேண்டுகோள்
2020-11-26@ 11:17:38

டெல்லி : “காச நோய்க்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்”. காச நோய் பற்றிய முன்னெச்சரிக்கை, பரிசோதனை மற்றும் குணப்படுத்துதல் குறித்து பெருவாரியான மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விரிவான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கேட்டுக் கொண்டுள்ளார். காச நோய் மேலாண்மை குறித்து பல்வேறு தரப்பினருடன் நடைபெற்ற கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் நீக்குவதற்காக சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட ஒருங்கிணைந்த தளம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.“காசநோயை நீக்குவதில் அனைவரின் ஆதரவு முக்கியம். 11 மாதங்களாக பெருந்தொற்றுக்கு எதிராக நாடு போராடி வருகிறது. கொவிட் நோய் தொற்றுக்கு முக்கியத்துவம் அளித்துவரும் நிலையில், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கும் நமது இலக்கிலிருந்து நாம் பின் வாங்கக் கூடாது”, என்று அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
நாட்டில் உள்ள அனைத்தையும் விற்கும் மோடி அரசு: இந்த மத்திய அரசால் மக்களை கொடூரமாக சுரண்ட மட்டுமே முடியும்: மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்
தங்கம் போல் உயரும் பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசை கண்டித்து எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மே.வங்க முதல்வர் மம்தா.!!!!
சர்ச்சைக்குரிய காட்சிகளை அரசு அல்லது நீதிமன்றம் நீக்க உத்தரவிட்டால் 36 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும்: OTT தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
பெட்ரோல் நிரப்புவதற்கும், சிலிண்டர் வாங்குவதற்கும் கடன் கேட்டு கனரா வங்கியில் இளைஞர்கள் மனு : வங்கி ஊழியர்கள் ஷாக்!!
வாக்குறுதி என்ன ஆச்சு: வேலை கொடுங்கள் மோடி: இந்தியளவில் டுவிட்டரில் #modi_job_do, #Mama_Rojgar_Do ஹேஷ்டாக்குகள் டிரெண்டிங்.!!!!
62 அலுவலக உதவியாளர் பணிக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி என அறிவிப்பு: 3,700 பிஎச்டி உட்பட 82,000 பட்டதாரிகள் விண்ணப்பித்த சோகம்!!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!