காஞ்சிபுரம் மாவட்டத்தில் 148 ஏரிகள் நிரம்பியது
2020-11-26@ 05:15:38

காஞ்சிபுரம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கி பரவலாக மழை பெய்தது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இந்நிலையில், நிவர் புயல் உருவாகி ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூர், நத்தப்பேட்டை, எறையூர் தேவனேரி, தாத்தனூர், குண்டு பெரும்பேடு, ஆரனேரி பெரிய ஏரி, நன்மங்கலம், புளிக்கொரடு இடும்பன் ஏரி, செம்பாக்கம் உள்ளிட்ட 70 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் கோலம்பாக்கம், எம்.என்.குப்பன் சித்தேரி, புக்கத்துரை பெரிய ஏரி, பட்டரைக் காலனி ஏரி உள்ளிட்ட 78 ஏரிகள் என மொத்தம் 148 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 101, செங்கல்பட்டு மாவட்டத்தில் 153 என மொத்தம் 254 ஏரிகள் 75 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது. 152 ஏரிகள் காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 142 ஏரிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் என மொத்தம் 294 ஏரிகள் 50 சதவீத கொள்ளளவும், 241 ஏரிகள் 25 சதவீத கொள்ளளவையும் எட்டியுள்ளன. 40 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக கொள்ளளவில் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான 18 அடி ஆழம் கொண்ட தாமல் ஏரி 4 அடி மட்டுமே நீர் நிரம்பி உள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட தென்னேரி ஏரி 15 அடி நீர் நிரம்பி உள்ளது.
20 அடி கொள்ளவு கொண்ட உத்திரமேரூர் பெரிய ஏரி 6 அடியும், 18 அடி கொள்ளளவு கொண்ட ஸ்ரீபெரும்புதூர் ஏரி 15.60 அடியும், 18.60 அடி கொள்ளளவு கொண்ட மணிமங்கலம் ஏரி15.60 அடியும் நீர் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 23.30 அடி கொள்ளளவு கொண்ட மதுராந்தகம் 16.11 அடி நீர் நிரம்பி உள்ளது. 16.11 அடி கொள்ளளவு கொண்ட கொண்டங்கி ஏரி 13 அடியும், 15.30 அடி கொள்ளளவு கொண்ட பொன்விளைந்த களத்தூர் ஏரி 11.60 அடியும், 16 அடி கொள்ளளவு கொண்ட கொளவாய் ஏரி 12.90 அடி நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
போடோ மற்றும் போடோ அல்லாதவர்கள் என்ற பெயரில் சச்சரவுகளைத் தூண்டுவதை தயவுசெய்து அடையாளம் காணவும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விக்கெட் எடுத்தது எனக்கு கனவுபோலவே இருந்தது: நடராஜன் பேட்டி
சாணார்பட்டி அருகே குளத்தில் மூழ்கி தாய் உள்பட 3 பேர் பலி
குடியரசு தினவிழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடல்
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார், அதிமுகவிடம் 2 தொகுதிகள் கேட்க்கவுள்ளோம்: கருணாஸ்
தமிழ் கலாச்சாரம், வரலாறு மற்றும் தமிழ் மொழியை மதிக்கும் ஆட்சியாக டெல்லி ஆட்சி இல்லை: ராகுல் காந்தி பேச்சு
வந்தவாசி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி
தமிழகத்தின் உரிமையை மத்திய பாஜக ஆட்சியிடம் அடகு வைத்துவிட்டர் முதலமைச்சர் பழனிச்சாமி: கனிமொழி குற்றசாட்டு
ஜோ பைடனின் நிர்வாகத்தில் இருந்து 2 இந்திய வம்சாவளியினரின் பெயர் நீக்கம்
கமல் தனித்து சென்று தேர்தலை சந்தித்தால் சொற்ப வாக்குகளையே பெறுவார்: கார்த்திக் சிதம்பரம் எம்.பி.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார்: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தகவல் !
சசிகலா உடல் நிலையில் மேலும் முன்னேற்றம்: பெங்களூரு விட்ட்டோரியா மருத்துவமனை அறிக்கை
தெற்கு ஷேட்லாண்ட் தீவுகளில் நிலநடுக்கம்: சிலியில் சுனாமி எச்சரிக்கை
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்