காஞ்சியில் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
2020-11-26@ 05:13:55

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பரவலாக விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய அக்.16ம் தேதியில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வ மண்டலம் நிவர் புயலாக உருவாகி தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காஞ்சிபுரத்தில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது.ஓரிக்கை அண்ணா நகர் சர்ச்தெரு பகுதியில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் உடைமைகள் சேதம் அடைந்தன. கோனேரிக்குப்பம் ஏனாத்தூர் சாலை, ரங்கசாமி குளம், விளக்கடி கோயில் தெரு, மேட்டுத்தெரு, செட்டித் தெரு, காமராசர் சாலையில் பஸ் நிலையம் அருகில், ரெட்டை மண்டபம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சரியான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வெளியேறாமல் தேங்கி நின்றது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகில் சாலையிலேயே மழைநீர் குளம்போல தேங்கி நிற்கிறது. மேலும், முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் செவிலிமேடு, ஓரிக்கை, ஜெம் நகர், கீழம்பி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் உள்ளவர்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் தொடர்ந்து அதிகமழை பெய்தால் என்ன நிலையோ என்று பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். நேற்று காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையளவு (மி.மீட்டரில்)விவரம்:
காஞ்சிபுரம் - 32.24
ஸ்ரீபெரும்புதூர் - 25.84
உத்திரமேரூர் - 24.68
வாலாஜாபாத் - 12.64
செம்பரம்பாக்கம் - 44.02
குன்றத்தூர் - 43.02
மழை பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகள்
ஓபிஎஸ் சகோதரர் மீதான புகார் வாபஸ்
கொடைக்கானல் ஆயுத பயிற்சி வழக்கு: கைதான 7 பேரும் விடுதலை: திண்டுக்கல் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
10 நாளாகியும் சந்திக்க வராத கவர்னரை கண்டித்து முதல்வர், அமைச்சர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்: ஜனாதிபதியை சந்திக்க தேதி கேட்டு கடிதம்
ஊழல் செய்வோரை தூக்கிலிட சட்டத் திருத்தம் கோரி வழக்கு: அரசிடம் முறையிட ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்
தமிழகத்தின் நலனுக்காகவோ, மக்கள் பிரச்னைக்காகவோ அல்ல, சசிகலாவிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ளவே எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்: மக்கள் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஜீரோ பாய்ண்ட் சிக்னல் அமைப்பு
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!