SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனமழை பாதிப்புகள் கலெக்டர் ஆய்வு

2020-11-26@ 05:06:35

பொன்னேரி: அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் அலுவலர் பாஸ்கரன், கலெக்டர் பொன்னையா மற்றும் வருவாய்த்துறை, ஊராட்சி துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து அத்திப்பட்டு ஊராட்சியில் அடங்கிய புதுநகர் மேற்கு பகுதியில் குடியிருப்புகள் தாழ்வான பகுதியில் உள்ளதால் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை வெளியேற்றும் வகையில் பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய்களை தூர்வாரி தண்ணீரை வெளியேற்றும் பணியை பார்வையிட்டார். தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களை அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், துணைத்தலைவர் எம்டிஜி கதிர்வேல் ஆகியோர் ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து சென்று காண்பித்தனர்.
அப்போது ஐஏஎஸ் அதிகாரிகளுடன் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துசாமி, பொன்னேரி ஆர்டிஓ செல்வம், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள், அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லை பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் நீர்தேக்க அணை முழு கொள்ளளவு எட்டி வருவதால் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகள் வழியாக பூண்டி நீர் தேக்கம் வரை சென்றடையும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிப்பட்டு, கரிம்பேடு மேம்பாலங்கள், நெடியம், மந்தவாடா, சங்கீதகுப்பம், கீழ்கால்பட்டடை ஆகிய தரைப்பாலங்கள் தன்மை குறித்து கலெக்டர் பொன்னையா அனைத்து துறை அலுவலர்களுடன் நேற்று காலை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குறிப்பாக தரைப்பாலங்கள் வலுவிழந்து காணப்படுவதால், கரையோர கிராமமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் என்றும்  பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ள பகுதிகளில்  தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, பொதுப்பணித் துறை அதிகாரிகள், வருவாய் கோட்டாட்சியர் சத்தியா, பள்ளிப்பட்டு வட்டாட்சியர் செல்வகுமார்,  உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • asusiiiee_dravviii1

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

  • korona-death19

    கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!

  • tn-school19

    தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!

  • jesee_chrrr1

    3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்