SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பவர்புல் பெண்மணி பங்களாவில் நடக்கும் அதிகார போட்டி குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2020-11-26@ 00:46:35

‘‘அவுட் சோர்சிங் மருத்துவ ஊழியர்களுக்கு நாலு மாசமா சம்பளம் தராமல் அரசு கைவிட்டுவிட்டதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்த வேளையில் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதாரம், மருத்துவம் சார்ந்த பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க ‘அவுட்சோர்சிங்’ மூலம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு பணியாற்றியவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லையாம். 4 மாதமாக ஊதியம் கிடைக்காததால் அதன் பிறகு பலரும் பணியில் இருந்தும் நின்றுவிட்டனர். மாவட்ட சுகாதாரத்துறையிடம் போதிய நிதி ஆதாரம் இல்லை என்று குமரி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தில் இதனை கண்காணிக்கும் பேரிடர் மேலாண்மை துறையோ பணியாளர் ஊதியத்தில் ஜிஎஸ்டியும் சேர்த்து தங்களால் வழங்க இயலாது என்றும், பின்னர் நிதி ஆதாரம் இருப்பு இல்லை என்றும் கூறி பைலை கிடப்பில் போட்டுவிட்டார்களாம்... இதனால் சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த அவுட்சோர்சிங் பணியாளர்கள் தலையில் இடி விழுந்ததுபோல கவலையில் மூழ்கி உள்ளார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘செங்கம் பத்திரப் பதிவு அலுவலகம் ரொம்ப செழிப்பா இருக்காமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிரி வலம் மாவட்டம் நன்னன் நகர்ல இருக்குற பத்திரப்பதிவு அலுவலகம் புரோக்கர்கள் பிடியில் சிக்கியிருக்குதாம். குறிப்பா பத்திரப்பதிவு அலுவலர் பணியிடத்துல வார நாட்கள்ல 3 பேர் மாறி, மாறி பணிபுரிகிறாங்களாம். நேற்று பணியில் இருந்தவர் இன்று இருக்க மாட்டாராம். அதே நேரத்துல முறையான ஆவணங்கள் இணைச்சு பத்திரப்பதிவு செய்ய வந்தாலும் அலைக்கழிக்கிறாங்களாம். அப்புறமா, அவரை புரோக்கர்கள் பின்தொடர்ந்து சென்று, குறிப்பிட்ட தொகையினை கேட்குறாங்களாம். அதுக்கு அப்புறமாவும், சில நாட்கள் அலைக்கழித்து பத்திரப்பதிவு நடக்குதாம். குறிப்பாக செங்கம் பத்திரப்பதிவு அலுவலகம் தான் கலெக்‌ஷன்ல டாப் கியர்ல போகுதாம்.. உரிய ஆவணங்கள் இல்லாத நிலையிலும், ரியல் எஸ்டேட் மற்றும் புரோக்கர்கள் சட்ட விரோத பத்திரப்பதிவு செய்தால் அதற்கு தனி ரேட் பிக்ஸ் பண்ணி வசூலிக்கிறாராம். புரோக்கர்கள் மூலமாக பதிவு செய்யும் விவரங்களை நோட் பேடில் குறித்து வைத்துக்கொண்டு ஆபீஸ் முடிஞ்சி வீட்டுக்கு திரும்புறப்போ புரோக்கருங்க வழியில அதிகாரி  பையில பணத்துடன், பதிவு செஞ்சவங்களோட பெயர், முகவரி எழுதி போட்டுட்டு வழி அனுப்பி வைக்கிறாங்களாம்... இதனால மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்பதில் பவர்புல் பெண்மணியும்- ஆளும் அரசும் தினமும் மல்லுகட்டுவது  வாடிக்கையான ஒன்றுதான். இப்போது அதுல ஒரு திருப்புமுனை. அதாவது பவர்புல் பெண்மணி இருக்கும் பங்களாவிலேயே அதிகார போட்டி என்பது அடிமட்டம் வரை பரவிவிட்டதாம்.  இதில் அந்த மாளிகையில் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும், பெண் அதிகாரியின் அலம்பல்  உச்சக்கட்டத்திற்கு சென்றுவிட்டதாம். பவர்புல் பெண்மணியின் நம்பிக்கை பெற்ற அவரை சந்தித்து, தங்கள் குறைகளை  தீர்க்குமாறு ஒரு சிலர் அணுகுகிறார்களாம். இதனால் அங்கு பணியாற்றும் மற்றொரு போலீஸ் அதிகாரிக்கும் ஈகோ யுத்தம் நடக்கிறதாம்.  இது எங்கே போய் முடியுமோ... புதுச்சேரிக்கு எப்போது விடிவு காலம் பிறக்குமோ என்று பொதுமக்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேனி மாவட்டத்துல காலி பணியிடத்துல ஆட்களை நிரப்பி கல்லா கட்டுறாங்க போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி காலி பணியிடங்களுக்கு பணிநியமனம் நடந்து வருகிறது. இதற்காக இலைக் கட்சியின் முக்கிய நபர் மாவட்டம் முழுவதும் ஆட்களை நியமிக்க பரிந்துரை செய்கிறாராம். அதன்படி இலை கட்சியை சேர்ந்த லோக்கல் பிரமுகர்கள் மூலமாக லட்சக்கணக்கில் பணம் விளையாடுதாம். கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் நிரந்தர கிளார்க் வேலைக்கு ஒன்றிய அதிகாரியின் அக்கா மகன் பெயரில் லிஸ்ட் தயாராகி விட்டதாம். இதற்காக 15 லகரம் கைமாறி இருக்கிறதாம். அந்த பணிக்கான எவ்வித தகுதியும் அவரிடம் இல்லை என கட்சிக்காரர்களே புகார் தெரிவிக்கிறார்களாம். கூடவே ஓ.ஏ வேலைக்கு பத்து லகரம் வரை டீலிங் போகிறதாம். சும்மா கண் துடைப்புக்கு நேர்காணல் நடத்தி விட்டு ஏற்கனவே பேசி வைத்த ஆட்களுக்கு மட்டுமே போஸ்டிங் போட போகிறார்களாம். இதனால் முறையான தகுதிகள் கொண்ட பொதுமக்கள் பணி நியமனம் செல்லாது என கோர்ட்டில் வழக்கு தொடுக்க முடிவு செய்திருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலைக்கோட்டையில ஒரு மலைத்து போகும் விஷயம் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலைக்ேகாட்டை சரகத்தில் உள்ள 5 மாவட்டத்திலும் தலைமை அலுவலகம் அறிவிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக கூறி வாரத்தில் 2 அல்லது 3 நாட்களில் விழா நடத்த ஏற்பாடு செய்து அதனை விளம்பரப்படுத்தும் விதமாக காக்கிகளின் வாட்ஸ்அப் குரூப்களில் காக்கி பெண் அதிகாரி பதிவிட்டு வருகிறாராம்... ஏதோ ஒருநாள் அல்லது 2 நாள் என்றால் பரவாயில்லை. வாரம் வாரம் விழா வைக்க கூறி அதிகாரிகளை பெண் அதிகாரி டார்ச்சர் செய்கிறாராம். அதிலும் சரக பெண் அதிகாரியை புகழ்ந்து சக காக்கிகள் வாசகம் பதிவிடுதால் அரசியல்வாதிகளை மிஞ்சுவிடுவார் என சக போலீசாரே கிசுகிசுகின்றார்களாம்... இந்த பெண் அதிகாரி, ரயில்வே அதிகாரியாக இருந்த போது ஏராளமான காவலர்களுக்கு மெமோ கொடுத்ததால் அதுபோல் மலைக்கோட்டை சரகத்தில் நடக்க கூடாது என்பதற்காக அவரை சரக காக்கிகள் புகழ்ந்து வாசகம் வெளியிடுவதாக பரவலாக சக காக்கி அதிகாரிகளுக்குள் பேசிக்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sun-dong25

  அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!

 • hongkomgggg_1111

  ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்

 • china-gold25

  அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!

 • 25-01-2021

  25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-01-2021

  24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்