சமஸ்கிருதத்தில் பதவியேற்ற இந்திய வம்சாவளி எம்.பி.
2020-11-26@ 00:40:25

மெல்போர்ன்: இமாச்சால பிரதேச மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் டாக்டர் கவுரவ் சர்மா. ஆக்லாந்தில் எம்பிபிஎஸ் முடித்த இவர், வாஷிங்டனில் எம்பிஏ படிப்பை முடித்தார். பின்னர், நியூசிலாந்து நாட்டின் மேற்கு ஹாமில்டனில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு. அத்தொகுதி எம்பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தனது பதவியேற்பின் போது, நியூசிலாந்தின் பூர்வீக மொழியான மாவோரியிலும், இந்திய மொழியான சமஸ்கிருதத்திலும் பதவி பிரமாணம் எடுத்து கொண்டார், என்று நியூசிலாந்து, சமோவாவுக்கான இந்திய தூதர் முகேஷ் பர்தேஷி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, ‘இந்தியில் ஏன் பதவிப் பிரமாணம் எடுத்து கொள்ளவில்லை?’ என்ற டிவிட்டர் கேள்விக்கு கவுரவ் அளித்துள்ள பதிலில், `உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தாய்மொழியான பகாரி அல்லது பஞ்சாபி மொழியில் எடுப்பதா? என்ற குழப்பம் இருந்தது. அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்பது முடியாது. எனவே, அனைத்து இந்திய மொழிகளுக்கும் மரியாதை அளிக்கும் வகையில் சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டேன்,'' என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
ஐஎஸ்எல் அரையிறுதியில் யார்? கோவா-ஐதராபாத் இன்று மோதல்
கிரிக்கெட் பிட்ஸ்
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் பும்ரா இல்லை
அடிலெய்டு மகளிர் டென்னிஸ் போலாந்தின் இகா சாம்பியன்
விஜய் ஹசாரே டிராபி 67 ரன் வித்தியாசத்தில் ஜார்க்கண்டை வீழ்த்தியது தமிழகம்
சென்னையில் நடக்குமா ஐபிஎல்?
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!