நிவர் புயல் எதிரொலி..!! தமிழகம், புதுச்சேரியில் நாளை நடைபெறவிருந்த NET தேர்வு ஒத்திவைப்பு; விரைவில் மறுதேதி
2020-11-25@ 19:21:30

சென்னை: நாளை நடைபெறவிருந்த NET தேர்வு நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு தேதி http://nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையம் சார்பில், கணிதம் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளுக்கு நாளை தேசிய தகுதித் தேர்வு (CSIR - NET) நடைபெற இருந்தது. இந்த ஆண்டுக்கான தேசிய தகுதித் தேர்வை நவம்பர் 19, 21, 26 ஆகிய தேதிகளில் நடத்த இந்திய தேர்வு முகமை திட்டமிட்டு இருந்தது.
திட்டமிட்டபடி நவம்பர் 19, 21 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், நிவர் புயல் காரணமாக நாளை நடைபெற உள்ள தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்வதில் சிக்கல் எழுந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளைத் தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, உரிய நேரத்தில் மாணவர்கள் தேர்வு மையங்களைச் சென்றடைய முடியாது.
கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணிபுரிவதற்கான தகுதித் தேர்வாகவும், முனைவர் பட்ட ஆய்வு மாணவராகப் பதிவு செய்வதற்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும் இந்தத் தேர்வு அமைந்திருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்த தேர்வாகக் கருத வேண்டியுள்ளது. நிவர் புயல் காரணமாக, நாளை நடைபெற உள்ள தேசிய தகுதித் தேர்வை தமிழக மாணவர்களால் எழுத இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த NET தேர்வு நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு தேதி http://nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அண்ணணும் கிடையாது.. தம்பியும் கிடையாது சசிகலாவை உயர்த்தி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
பொங்கல் பண்டிகைக்கு பஸ்கள் இயக்கம் போக்குவரத்து கழகத்துக்கு 5.46 கோடி வருவாய்: 5.6 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
நலிவடைந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படுமா?
தாமதம் செய்யும் உணவுத்துறை அதிகாரிகளால் தண்டனை பெறும் ரேஷன் கடை பணியாளர்கள்: தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா பொது மண்டபம் 40 கோடி செலவில் புனரமைப்பு: விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார்
இசிஐ சென்னை பேராயத்தின் முதல் பெண் பேராயராக கதிரொளி மாணிக்கம் தேர்வு
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்