தமிழகத்தில் மேலும் 1,534 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 7.74 லட்சமாக உயர்வு; 11,655 பேருக்கு சிகிச்சை.!!!
2020-11-25@ 18:55:29

சென்னை: தமிழகத்தில் மேலும் 1,534 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,74,710-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,
* தமிழகத்தில் மேலும் 1,534 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,74,710 ஆக அதிகரித்துள்ளது.
* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,51,535 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,873 பேர் குணமடைந்துள்ளனர்.
* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,655 ஆக உயர்ந்துள்ளது.
* சென்னையில் இன்று ஒரே நாளில் 467 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,13,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் இதுவரை 1,17,41,603 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 68,082 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 218 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 11,520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,68,025 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 914 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,06,651 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 619 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு 1 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அண்ணணும் கிடையாது.. தம்பியும் கிடையாது சசிகலாவை உயர்த்தி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
பொங்கல் பண்டிகைக்கு பஸ்கள் இயக்கம் போக்குவரத்து கழகத்துக்கு 5.46 கோடி வருவாய்: 5.6 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
நலிவடைந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படுமா?
தாமதம் செய்யும் உணவுத்துறை அதிகாரிகளால் தண்டனை பெறும் ரேஷன் கடை பணியாளர்கள்: தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா பொது மண்டபம் 40 கோடி செலவில் புனரமைப்பு: விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார்
இசிஐ சென்னை பேராயத்தின் முதல் பெண் பேராயராக கதிரொளி மாணிக்கம் தேர்வு
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்