ரூ28 கோடி உள்ளீட்டு வரி மோசடி: அரியானாவில் 2 பேர் கைது
2020-11-25@ 17:05:49

புதுடெல்லி: ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி கடன் மோசடிக்காக சத்தேந்திர குமார் சிங்க்லா என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறையில் உள்ளீட்டு வரி கடன் திரும்பப்பெறுதல் என்ற முறை உள்ளது. உள்ளீட்டு வரிக் கடன் என்பது உள்ளீடுகளில் செலுத்தப்படும் வரிக்கான பணத்தைத் திரும்பப் பெறுவதாகும். இது ஜிஎஸ்டி கட்டணத்திற்கு பொறுப்பான இறுதி பெருக்கத் தொகையை உருவாக்கும். இந்த உள்ளீட்டு வரி கடனை பெறுவதற்காக போலியான ரசீதுகளின் மூலம் வரி ஏய்ப்பு செய்ததற்காக அரியானாவைச் சேர்ந்த விகாஸ் ஜெயின் என்பவரை ரோஹ்தக் மண்டல ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.
சுமார் ரூ. 27.99 கோடி உள்ளீட்டு வரி கடன் மோசடிக்காக விகாஸ் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட விகாஸ் ஜெயின் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே, இதே வழக்கில் சத்தேந்திர குமார் சிங்க்லா என்பவரை மண்டல ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரக அதிகாரிகள் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் வரும் 18-ம் தேதி காலை 10.15 மணிக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம்: வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்..!
3,006 மையங்களில் நாடு முழுவதும் நாளை காலை 10:30 மணிக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும்: பிரதமர் மோடி ட்விட்..!
இது கொரோனா முடிவின் ஆரம்பம்: உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா நாளை தொடங்குகிறது: ஹர்ஷ்வர்தன் பேட்டி..!
போராடும் விவசாயிகள்: 9-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டம்..!
இன்று திருவள்ளுவர் தினம் திருக்குறளை படியுங்கள்: இளைஞர்களுக்கு மோடி அறிவுரை
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய சுப்ரீம் கோர்ட் நியமித்த 4 பேர் குழுவில் ஒருவர் விலகல்: விவசாயிகளுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்