தொடரும் கனமழை...!! செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 3,000 கன அடியாக அதிகரிப்பு; அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
2020-11-25@ 16:35:01

செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3000 கனஅடி நீர் திறக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது நீர் திறப்பு 3000 கனஅடியாக உயர்ந்துள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ. பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும்.
தற்போது, வடகிழக்குப் பருவமழையினாலும், கிருஷ்ணா நீர் வரத்தினாலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து உள்ளபடியால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் 22.00 அடியாக உயரும்போது, அணையின் வெள்ள உபரிநீர் வெளியேற்றும் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி அணைக்கு வரும் நீர் வரத்து அவ்வாறே வெளியேற்றப்பட வேண்டும். இன்று 22.00 அடியை நெருங்குவதாலும் ஏரியின் நீர்வரத்து நொடிக்கு 4,027 கன அடியாகவும் உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் இன்று 12.00 மணியளவில்1,000 கன அடி திறக்கப்படுகிறது.
நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மழை பொழிவு மேலும் அதிகரிக்கும் என்ற காரணத்தால் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவை ஆபத்தும் ஏதுமின்றி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 3000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
காரின் சாவியை பிடுங்கி, ராஜேஷ் தாஸூடன் பேசுமாறு பெண் எஸ்.பி.யை வற்புறுத்தியதாக செங்கல்பட்டு எஸ்.பி மீது புகார்
காவலர் உடற்தகுதி தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அரசாணை இதுவரை வெளியிடப்படாத நிலையில் அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அமலுக்கு வருமா? மக்களிடையே குழப்பம்
தேர்தல் நேரத்தில் ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி
கம்பம் சுருளி அருவியில் குளிக்க திடீர் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவிப்பால் பதற்றம்: காவி சால்வையை போலீசார் உடனடியாக அகற்றி நடவடிக்கை
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்