நஷ்டத்தில் இயங்கி வரும் லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வாங்குவதற்கு மத்திய அமைச்சரவை கூடுதல் ஒப்புதல்..!
2020-11-25@ 16:03:59

டெல்லி: லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வாங்குவதற்கு மத்திய அமைச்சரவை கூடுதல் ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கி கடந்த சில ஆண்டுகளாகவே லட்சுமி விலாஸ் வங்கி மிக மோசமாகச் செயல்பட்டு வருகிறது. சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிக் கொண்டிருந்த இவ்வங்கி வாராக் கடன் பிரச்சினையில் சிக்கியது. லட்சுமி விலாஸ் வங்கியின் வாராக் கடன்கள் 2020 மார்ச் மாத நிலவரப்படி 25.39 சதவிகிதமாக அதிகரித்தது.
தொடர்ந்து இயங்கவே முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் லஷ்மி விலாஸ் வங்கியை 2019 செப்டம்பர் மாதத்தில் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மத்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் பெரிய கடன்களை வழங்கவோ அல்லது பெரிய டெபாசிட் தொகையைப் பெறவோ முடியாது. இந்த வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
நஷ்டத்தில் இயங்கி வரும் லக்ஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான வரைவை ரிசர்வ் வங்கி கடந்த 17-ம் தேதி வெளியிட்டது. இந்நிலையில், வங்கி இணைப்பிற்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அசீம் உள்கட்டமைப்பு நிதி லிமிடெட் மற்றும் NIIF உள்கட்டமைப்பு நிதி லிமிடெட் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தால் நிதியளிக்கப்பட்ட NIIF கடன் மேடையில் 6000 கோடி ரூபாய் உட்செலுத்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் வரும் 18-ம் தேதி காலை 10.15 மணிக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம்: வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்..!
3,006 மையங்களில் நாடு முழுவதும் நாளை காலை 10:30 மணிக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும்: பிரதமர் மோடி ட்விட்..!
இது கொரோனா முடிவின் ஆரம்பம்: உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா நாளை தொடங்குகிறது: ஹர்ஷ்வர்தன் பேட்டி..!
போராடும் விவசாயிகள்: 9-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டம்..!
இன்று திருவள்ளுவர் தினம் திருக்குறளை படியுங்கள்: இளைஞர்களுக்கு மோடி அறிவுரை
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய சுப்ரீம் கோர்ட் நியமித்த 4 பேர் குழுவில் ஒருவர் விலகல்: விவசாயிகளுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்