பாகிஸ்தானில் அதிகரிக்கும் கற்பழிப்புகள்: குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்க பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்..!
2020-11-25@ 14:41:59

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நாளுக்குநாள் கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்குவது தொடர்பான சட்ட வரைவுக்கு கொள்கை அடிப்படையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான அவசர சட்ட வரைவை அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்தபோது, இந்த கடுமையான தண்டனை குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. காவல்துறையில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது, கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பது, சாட்சிகளின் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் இந்த வரைவு சட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆண்மை நீக்க தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஆளுங்கட்சி செனட்டர் பைசல் ஜாவேத் கான், விரைவில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
விடாமல் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..! உலகளவில் 13.59 கோடி பேருக்கு பாதிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 29.38 லட்சம் ஆக உயர்வு
சில்லரை நிறுவனங்களை நசுக்க முயற்சி அலிபாபாவுக்கு ரூ.20,000 கோடி அபராதம்: சீனா அதிரடி
எங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் லட்சத்தீவில் நுழைய உரிமை இருக்கிறது: இந்தியாவுக்கு அமெரிக்கா விளக்கம்
இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்: 6 பேர் பரிதாப பலி
இந்தோனேஷியாவின் ஜாவா தீவு அருகே கடலுக்கு அடியில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
பல மடங்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு... உயரும் உயிரிழப்புகள்: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.52 கோடியை கடந்தது!!!
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!