10 கோடிக்குள் தயாராகும் படங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை: தெலங்கானா அரசு அறிவிப்பு
2020-11-25@ 01:05:49

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக திரையுலகம் முடங்கி உள்ளது. தற்போது தளர்வுகள் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது, படப்பிடிப்புகள் நடக்கிறது. ஆனால் மக்கள் தியேட்டருக்கு வரத் தயங்குகிறார்கள். பெரிய பட்ஜெட் படங்கள் வௌிவருவதில் தயக்கம் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு திரைத்துறையை மீட்டெடுக்க தெலங்கானா அரசு, தெலுங்கு திரைப்படத்துறைக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது.அதன்படி 10 கோடி பட்ஜெட்டுக்குள் தயாராகும் படங்கள் வெளியாகும்போது டிக்கெட் கட்டணத்தில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி அவர்களுக்கே திருப்பி அளிக்கப்படும்.
தியேட்டர்களுக்கு குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்கப்படும், தியேட்டர்கள் தங்களின் விருப்பப்படி காட்சிகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம், அதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. இவைகள் உள்பட ேமலும் சில சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்காக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு நடிகர்கள், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, இயக்குனர் ராஜமவுலி உள்பட பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் வரும் 18-ம் தேதி காலை 10.15 மணிக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம்: வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்..!
3,006 மையங்களில் நாடு முழுவதும் நாளை காலை 10:30 மணிக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும்: பிரதமர் மோடி ட்விட்..!
இது கொரோனா முடிவின் ஆரம்பம்: உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா நாளை தொடங்குகிறது: ஹர்ஷ்வர்தன் பேட்டி..!
போராடும் விவசாயிகள்: 9-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டம்..!
இன்று திருவள்ளுவர் தினம் திருக்குறளை படியுங்கள்: இளைஞர்களுக்கு மோடி அறிவுரை
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய சுப்ரீம் கோர்ட் நியமித்த 4 பேர் குழுவில் ஒருவர் விலகல்: விவசாயிகளுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்