நாயை விட்டு ஆசிரியையை கடிக்க வைத்த பள்ளி தாளாளர் கைது
2020-11-25@ 00:43:16

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை விநாயகபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீமதி (31). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், தண்டையார்பேட்டை தண்டையார் நகரை சேர்ந்த கார்த்திக் (எ) பிரேம்நாத் (29) நடத்தி வந்த மாதா நர்சரி பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அப்போது, பள்ளி விரிவாக்க பணிக்காக ஸ்ரீ மதியிடம் 27 சவரன் நகைகளை பிரேம்நாத் வாங்கியுள்ளார். ஆனால், அைத திருப்பி தரவில்லை, என கூறப்படுகிறது. இதுபற்றி ஸ்ரீமதி பலமுறை பிரேம்நாத்திடம் கேட்டபோதும், தராமல் அலைக்கழித்துள்ளார்.இந்நிலையில், ஸ்ரீமதி நேற்று முன்தினம் பிரேம்நாத் வீட்டிற்கு சென்று, தனது நகைகளை திருப்பி கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பிரேம்நாத் வீட்டில் வளர்க்கும் நாயை ஸ்ரீமதி மீது ஏவி விட்டுள்ளார். நாய் கடித்ததில் ஸ்ரீமதி முகம், கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனை யில் சேர்த்தனர். புகாரின் பேரில், காசிமேடு போலீசார் வழக்கு பதிந்து, பிரேம்நாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
அண்ணணும் கிடையாது.. தம்பியும் கிடையாது சசிகலாவை உயர்த்தி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
பொங்கல் பண்டிகைக்கு பஸ்கள் இயக்கம் போக்குவரத்து கழகத்துக்கு 5.46 கோடி வருவாய்: 5.6 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
நலிவடைந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படுமா?
தாமதம் செய்யும் உணவுத்துறை அதிகாரிகளால் தண்டனை பெறும் ரேஷன் கடை பணியாளர்கள்: தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா பொது மண்டபம் 40 கோடி செலவில் புனரமைப்பு: விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார்
இசிஐ சென்னை பேராயத்தின் முதல் பெண் பேராயராக கதிரொளி மாணிக்கம் தேர்வு
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்