மயான ஊழியரிடம் 5 ஆயிரம் லஞ்சம்: துப்புரவு ஆய்வாளர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
2020-11-25@ 00:41:32

துரைப்பாக்கம்: மயான ஊழியரிடம் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி துப்புரவு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ரஞ்சித் (44). இவர், சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் மண்டலம் 196வது வார்டில் உள்ள ஈஞ்சம்பாக்கம் எரிவாயு தகன மேடையில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகிறார்.இந்த மயானத்தில் 233 சடலங்களை தகனம் செய்தற்கான பணத்தை பெறுவதற்கு சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் அண்மையில் ரசீதுகளை சமர்ப்பித்துள்ளார். அதை தணிக்கை செய்து பணம் வழங்குவதற்கு, அந்த வார்டின் துப்புரவு ஆய்வாளராக பணிபுரியும் விக்னேஷ்வரன் (31), 5 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ரஞ்சித், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் கந்தசாமியிடம் புகார் செய்தார். அதன்பேரில், கந்தசாமி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, அதை துப்புரவு ஆய்வாளர் விக்னேஷ்வரனிடம் தரும்படி கூறியுள்ளனர். அதன்படி, விக்னேஷ்வரனை நேற்று அவரது அலுவலகத்தில் சந்தித்த ரஞ்சித், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தபோது, மறைந்திருந்த ஆய்வாளர் கந்தசாமி தலைமையிலான போலீசார், விக்னேஷ்வரனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
அண்ணணும் கிடையாது.. தம்பியும் கிடையாது சசிகலாவை உயர்த்தி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
பொங்கல் பண்டிகைக்கு பஸ்கள் இயக்கம் போக்குவரத்து கழகத்துக்கு 5.46 கோடி வருவாய்: 5.6 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
நலிவடைந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படுமா?
தாமதம் செய்யும் உணவுத்துறை அதிகாரிகளால் தண்டனை பெறும் ரேஷன் கடை பணியாளர்கள்: தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா பொது மண்டபம் 40 கோடி செலவில் புனரமைப்பு: விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார்
இசிஐ சென்னை பேராயத்தின் முதல் பெண் பேராயராக கதிரொளி மாணிக்கம் தேர்வு
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்