SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தயார் நிலையில் 100 கனரக இயந்திரங்கள் 200 வார்டுகளிலும் மீட்பு குழு: மாநகராட்சி ஆணையர் பேட்டி

2020-11-25@ 00:40:01

சென்னை: நிவர் புயலையொட்டி மீட்பு பணி மேற்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் 100க்கும் மேற்பட்ட கனரக இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அதன்படி 70 பாப்காட், 21 பொக்லைன் இயந்திரங்கள், 112 தானியங்கி கனரக வாகனங்கள், மரம் அறுக்கும் கருவிகள், நடமாடும் உயர்கோபுர மின்விளக்கு, 200க்கும் மேற்பட்ட ஜெனரேட்டர்கள், நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் ஆகியவைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 109 இடங்களில் படகுகள், 176 நிவாரண மையங்கள், 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவ குழுக்கள், 4 பொது சமையல் அறைகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
 
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது: மாநகராட்சி சார்பில் அனைத்து முன்ெனச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 200 வார்டுகளிலும் பொறியாளர்கள் தலைமையிலான குழு, ஒப்பந்ததாரர்கள், சிறப்பு மீட்பு இயந்திரங்கள், பம்புகள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றார்.

புகார் எண்கள்
பொதுமக்கள் புயல் தொடர்பாக 044-25384530, 044-25384540 என்ற தொலைபேசி எண்களிலும், 1913 என்ற எண்ணில் புகார் மையத்தையும் தொடர்பு ெகாள்ளலாம், என மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-vaccine12

    கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்