மீஞ்சூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளம்பெண் கைது
2020-11-25@ 00:36:51

பொன்னேரி: மீஞ்சூரில் உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். மீஞ்சூரில், வங்கதேசத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காஞ்சிபுரம் சிபிசிஐடி போலீசார் மீஞ்சூரில் தங்கியிருந்த இளம் பெண்ணை பிடித்தனர். விசாரணையில், அவரது பெயர் பப்பியா கோஷ் என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. சட்டவிரோதமாக தங்கியிருந்த அந்த பெண்ணை மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மீஞ்சூர் போலீசார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், வங்கதேசத்தை சேர்ந்த பப்பியா கோஷ் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு வாலிபரை முகநூலில் பழகி காதலித்து இந்தியா வந்து அந்த வாலிபரை பதிவு திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவி ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து மீஞ்சூரில் அவர் ஏன் தங்கினார் என்பது குறித்து வங்கதேச இளம்பெண்ணிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
பொங்கல் விழாவை தடுத்த ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி: கும்பலுக்கு வலை
மூதாட்டியை தாக்கி 10 சவரன், பணம் கொள்ளை
கஞ்சா கடத்தியவர் கைது
துபாயில் இருந்து கடத்தி வந்த ₹44 லட்சம் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது
தங்கம் கடத்திய 2 பேர் கைது
சிக்கன் பிரைட் ரைசுக்கு பணம் கேட்டதால் மிரட்டல் ‘அமித்ஷா பிஏவுக்கு போன் போடவா... ஆயிரம் பேரை இறக்குவோம்...’ திருவல்லிக்கேணி பாஜ பிரமுகர் கைது
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்