லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 6 நாளில் 53%க்கு மேல் சரிந்தது
2020-11-25@ 00:09:38

மும்பை: லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள், 6 நாட்களிலேயே 53 சதவீதத்துக்கும் மேல் சரிவை சந்தித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கி, 2,200 கோடி நிதி திரட்ட அனுமதி கோரி ரிசர்வ் வங்கியை நாடியது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் கிளிக்ஸ் கேபிடல் ஆகியவற்றுடன் இந்த வங்கியை இணைக்கும் முயற்சிகளும் ஈடேறவில்லை. மேலும், லட்சுமி விலாஸ் வங்கியின் 93வது ஆண்டு பொதுக்கூட்டத்தில், ஏற்கெனவே வங்கி நிர்வாகத்தில் இருந்த நிர்வாக இயக்குநர், தலைமை செயல் அதிகாரி உட்பட 7 பேரின் மறு நியமனத்தை பங்குதாரர்கள் புறக்கணித்தனர். வங்கி வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இதுவே முதல் முறை. இப்படி அடுத்தடுத்த சம்பவங்கள், நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையின்மையையும், லட்சுமி விலாஸ் வங்கி திவாலாகும் நிலையை எட்டுவதற்கான அறிகுறிகளையும் காட்டுவதாக கருதப்பட்டது.
வராக்கடன் அதிகரிப்பால் வங்கியின் நிதி நிலை மோசமான நிலையில், இந்த வங்கியை சீரமைப்பு நடவடிக்கையின் கீழ் கொண்டு வந்துள்ள ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு திடீர் கட்டுப்பாடு விதித்து கடந்த 17ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதன்படி லட்சுமிவிலாஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு அல்லது இதர டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கி கணக்கில் இருந்து 25,000க்கு மேல் பணம் எடுக்க முடியாது. உயர் கல்வி, மருத்துவ சிகிச்சை, திருமணம் அல்லது இதர தவிர்க்க முடியாத செலவினங்களுக்காக 25,000க்கு மேல் எடுத்துக் கொள்ளலாம்.
அதிகபட்சம் 5 லட்சம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என கட்டுப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகவே தொடர் நஷ்டங்கள் காரணமாக வங்கியின் சொத்து மதிப்பு குறைந்து வந்துள்ளது. மேற்கண்ட பாதிப்புகளின் எதிரொலியாக, லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் கடந்த 6 நாட்களிலேயே மும்பை பங்குச்சந்தையில் 53 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. இந்த வங்கி பங்குகளின் மதிப்பு தேசிய பங்குச்சந்தையில் 9.88 சதவீதம் சரிந்து 7.30 என கடும் சரிவை சந்தித்தது. அதிலிருந்து 6 நாட்களில் மட்டும் இந்த வங்கி பங்குகள் மதிப்பு மும்பை பங்குச்சந்தையில் 53.35 சதவீதம் சரிந்துள்ளது.
மேலும் செய்திகள்
இனி தங்க வேட்டை தான்... ஆபரணத் தங்கத்தின் விலை செம குறைவு... சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை!!
செம தள்ளுபடியில் தங்கம் விலை.. நகை வாங்குவோருக்கு ஜாக்பாட் தான்.. 6வது நாளாக விலை சரிவு... சவரன் ரூ.37.416க்கு விற்பனை!!
செம சரிவில் தங்கம் விலை... தொடர்ச்சியாக 5 நாட்களில் சவரன் ரூ.1,664 அளவுக்கு குறைந்து ரூ.37,440க்கு விற்பனை!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில் சதம் அடித்த முருங்கைக்காய்: உச்சமடையும் கத்தரிக்காய் விலை
பண்டிகை காலத்தில் நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296-க்கு விற்பனை..!
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; 1 கோடி முட்டை நாமக்கல்லில் தேக்கம்: 4 நாட்களில் 50 காசு விலை குறைப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்