வேளாண் சட்டம் எதிர்த்து போராட்டம் டெல்லி புறப்பட்ட விவசாயிகள் சிறைவைப்பு: போலீசை கண்டித்து சாலை மறியல்
2020-11-25@ 00:06:07

திருச்சி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் நாளை (26ம்தேதி), நாளை மறுநாள் (27ம்தேதி) என 2 நாட்கள் இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 500 விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதையொட்டி திருச்சியிலிருந்து அய்யாக்கண்ணு தலைமையில் 150 விவசாயிகள் நேற்று காலை ரயிலில் புறப்பட தயாராக இருந்தனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு அதிரடியாக அய்யாக்கண்ணு வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை விவசாயிகளுடன் சிறை வைத்தனர். இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், டெல்லிக்கு 150 விவசாயிகளும் பாதி தலையை மொட்டை அடித்து செல்ல முடிவு எடுத்தோம். ஆனால் போலீசார் இரவே வீட்டிற்கு வந்து உங்களை வீட்டு சிறையில் அடைக்கிறோம் என கூறிவிட்டனர் என்றார். வீட்டில் சிறை வைக்கப்பட்டதை கண்டித்து விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் கரூர் பைபாஸ் சாலையில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Tags:
Agriculture law protest Delhi farmers' imprisonment police condemnation road block வேளாண் சட்டம் எதிர்த்து போராட்டம் டெல்லி விவசாயிகள் சிறைவைப்பு போலீசை கண்டித்து சாலை மறியல்மேலும் செய்திகள்
பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
4வது நாளாக நீடிக்கும் வெள்ளப்பெருக்கு நெல்லை, தூத்துக்குடியில் மிதக்கும் குடியிருப்புகள்: தண்ணீரை வெளியேற்ற கோரி 4 இடங்களில் சாலைமறியல்
பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் 180வது பிறந்தநாள் விழா
அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம்.! 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயம்: அலங்காநல்லூர், சிராவயலில் இன்று களை கட்டுகிறது
பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று மாலை 5 மணியளவில் நிறைவு: 18 காளைகளை பிடித்து வீரர் கருப்பாயூரணி கார்த்தி முதலிடம்..!!
அதிமுக ஒப்பந்ததாரரால் கட்டப்பட்ட குடவாசல் அரசு பெண்கள் பள்ளி இடிந்து விழுந்தது: திறப்புக்கு முன் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய பெற்றோர் கோரிக்கை
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்