வேலை நிறுத்தத்தில் காங்கிரசார் அனைவரும் பங்கேற்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
2020-11-25@ 00:05:54

சென்னை: ஏர்கலப்பை பேரணி டிசம்பர் 2ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றும், தேசிய அளவிலான வேலை நிறுத்த போராட்டத்தில் காங்கிரசார் திரளாக பங்கேற்க கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களின் சங்கங்கள், வங்கி, ரயில்வே மற்றும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் இயங்கும் சங்கங்கள் இணைந்து நவம்பர் 25ம் தேதி நள்ளிரவு முதல் நவம்பர் 26ம் தேதி நள்ளிரவு வரை முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது எந்த விவாதமும் இன்றி, தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டங்களாக குறைக்கப்பட்டு, ஜனநாயக நடவடிக்கையை மீறி ‘வணிகத்தை எளிதாகச் செய்வது’ என்ற அடிப்படையில் மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. நம் நாட்டின் சொத்துகளை கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடித்துச் செல்வதற்கு அமைதியாக வழியமைத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, தேசிய வேலை நிறுத்தத்தையொட்டி, நவம்பர் 26ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரும், ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தினரும் பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன். மத்திய பாஜ அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 28ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த ஏர் கலப்பை பேரணி புயல் சீற்றத்தின் காரணமாக டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:
KS Alagiri announces that all Congressmen will participate in the strike வேலை நிறுத்தத்தில் காங்கிரசார் அனைவரும் பங்கேற்க கே.எஸ்.அழகிரி அறிவிப்புமேலும் செய்திகள்
மதிமுகவில் நிர்வாகிகள் நியமனம்: வைகோ அறிவிப்பு
புதுவையில் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் தனித்து போட்டியிடவும் தயாராகவே இருக்கிறோம்: திருப்பூரில் கே.எஸ்.அழகிரி பேட்டி
தூய்மை பணியாளர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்: மா.சுப்பிரமணியன் பேட்டி
பாஜ ஒட்டிய பேனரை கிழித்த அதிமுக பிரமுகர்
சொல்லிட்டாங்க...
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சபை கூட்டங்கள்: மாவட்டச் செயலாளர் க.சுந்தர் தகவல்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்ந்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!