அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
2020-11-24@ 01:24:40

கவுகாத்தி: அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 86.காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் தருண் கோகாய். கொரோனா நோய் தொற்று காரணமாக தருண் கோகாய், இரண்டு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் கடந்த அக்டோபர் 25ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு பின்னரான உடல்நலக்கோளாறுகள் காரணமாக கடந்த 2ம் தேதி அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அவர் நீண்டகாலமாக சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 5.34 மணிக்கு தருண் கோகாய் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துனை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கோட்டயத்தில் பரபரப்பு; அறையில் அடைத்து பெற்றோருக்கு உணவு கொடுக்காமல் சித்ரவதை: தந்தை மரணம்; தாய்க்கு சிகிச்சை- கொடூர மகன் மீது வழக்குப்பதிவு
புனேவில் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து...! 5 பேர் உயிரிழப்பு: சீரம் நிறுவனத்தின் சிஇஓ இரங்கல்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நிதி...! மேற்கு வங்க ஆளுநர் ரூ.5 லட்சம் நன்கொடை
புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனத்தில் தீ விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்..!
எந்த தடுப்பூசியாக இருந்தாலும் பக்க விளைவுகள் இருப்பது பொதுவானது: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேட்டி
அடுத்த அதிரடி!: ஆந்திராவில் வீடுவீடாக சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..!!
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!