அதிமுகவை கைப்பற்ற அமித்ஷா முயற்சியா? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
2020-11-24@ 01:09:43

சிதம்பரம்: தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்றுமுன்தினம் சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உலகத்தின் இதயப் பகுதியாக இருப்பது சிதம்பரம் நடராஜர் கோயில். இங்கு வந்து சென்றால் நல்ல விஷயங்கள் நடக்கும் என்பதால் இங்கு வந்து சாமி கும்பிட்டுள்ளேன் என்றார். அப்போது செய்தியாளர் ஒருவர், அமித்ஷா தமிழகத்திற்கு வந்துள்ளது அதிமுகவை கைப்பற்றத்தான் என எதிர்க்கட்சியினர் கூறுகிறார்களே என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராஜேந்திரபாலாஜி, அதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது. அதிமுக ஆண்டவன் கட்சி. அதிமுகவை அதிமுகதான் ஆளும். அதிமுகவின் நண்பர் அமித்ஷா. அவர் அதிமுகவிற்கு நல்லதுதான் செய்வார். ரஜினி அரசியலுக்கு வருவார் என நான் கூறவில்லை. வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றுதான் கூறினேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்: திமுக அறிவிப்பு
இந்திய நாட்டின் 30 கோடிக்கும் அதிகமான விவசாயிகளை எதிரிகளாக நினைக்கிறது மத்திய அரசு : மு.க.ஸ்டாலின் சாடல்
திமுக. எம்.பி.க்கள் இதுவரை சாதித்தது என்ன?...தமிழக நலன்களுக்காக திமுக. தொடர்ந்து குரல் கொடுக்கும்! :மு.க.ஸ்டாலின் தலைமையில் 2 தீர்மானங்கள்!!
சசிகலாவின் சொந்தங்கள் சொத்துக்கு அலைகின்றனர்: புகழேந்தி குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சி அமைக்குமா என இப்போது கூறமுடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
முதலமைச்சர் ஆவோம் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!