சிறைகளில் மனநல சிகிச்சை மையம் கோரி வழக்கு போலீசார் லஞ்சம் வாங்குவதும்மனஅழுத்தம் சார்ந்த பிரச்னையே: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து
2020-11-24@ 01:06:28

மதுரை: சிறைகளில் மனநல சிகிச்சை மையங்கள் அமைக்கக்கோரிய வழக்கு விசாரணையின்போது, ஐகோர்ட் கிளை நீதிபதிகள் குறுக்கிட்டு, போலீசார் லஞ்சம் வாங்குவதும்கூட மனஅழுத்தம் சார்ந்த பிரச்னையே என்று கருத்து தெரிவித்தனர்.
மதுரையைச் சேர்ந்த ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கொலை வழக்குகளில் சிறைத்தண்டனை அனுபவிப்ேபார் அதிகளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சிறைவாசிகளின் மன அழுத்தத்தை போக்கிட மத்திய சிறைகளில் சிறப்பு மனநல சிகிச்சை குழு அமைக்க வேண்டியது அவசியம். இக்குழு சென்னை மத்திய சிறையில் மட்டுமே உள்ளது. திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இதுவரை அமைக்கப்படவில்லை. அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மனநல ஆலோசகர், மனநல சிகிச்சையில் பயிற்சி பெற்ற சமூக ஆர்வலர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோரை கொண்ட சிறப்பு மனநல சிகிச்சை குழுவை மத்திய சிறைகளில் அமைக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘தற்போதைய கொரோனா காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். காவல்துறையினர் வன்முறை மனோபாவத்துடன் நடந்து கொள்வதும், லஞ்சம் வாங்குவதும் கூட விடுமுறை இல்லாமல் தொடர் பணியாற்றும் மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகளின் வெளிப்பாடே. தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாதது, போதிய அளவிற்கு தூக்கம் இல்லாதது போன்றவற்றின் வெளிப்பாடுதான். குடும்ப பிரச்னைகளுக்கு இதுவும் காரணம். எனவே, மனநல மருத்துவர்களின் தேவை அதிகமுள்ளது’’ என்றனர். அரசுத்தரப்பில், ‘‘தமிழக சிறைகளில் மனநல சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகள்
திமுக ஆட்சியில் அமர்ந்ததும் ஜெ.மறைவுக்கு முறையான விசாரணை செய்து குற்றவாளிகள் வீதியில் நிறுத்தப்படுவார்கள்: தேனியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஆஸ்பத்திரிக்கு சென்ற போது 108 ஆம்புலன்சில் ‘குவா குவா’
திருத்தங்கல் இணைக்கப்பட்டதால் பெரு நகராட்சியாக தரம் உயர்ந்தது சிவகாசி-அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என மக்கள் எதிர்பார்ப்பு
தோகைமலை அருகே வடசேரி ஆர்டிமலை பகுதியில் புதிய பாலம், சாலை தரமின்றி அமைத்ததால் ஒரு அடி கீழே இறங்கி பழுதான அவலம்-நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
கேபிள் டிவி ஆபரேட்டர் கொலையில் 9 பேர் கைது: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
கொடைக்கானல் அப்சர்வேட்டரி நீர்த்தேக்கத்தில் கிடப்பில் கிடக்கும் உபரி நீர் சேமிப்பு-தடுப்பணை கட்டும் பணி எப்போது துவங்கும்?
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!