ஜனவரி அல்லது பிப்ரவரியில் பாதி விலையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி: சீரம் நிறுவன அதிகாரி தகவல்
2020-11-23@ 21:40:35

லண்டன்: ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பாதிவிலையில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ மருந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அரசுக்கு கிடைக்க உள்ள நிலையில் அது 50 சதவீதம் அளவிற்கு விலை குறைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் முடிவடைய உள்ள நிலையில் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், சீரம் நிறுவனத்துக்கு இந்த மருந்து இரண்டு மாதங்களில் கிடைக்கலாம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட விலையான ரூ.500 அல்லது 600 ரூபாயில் இந்தியாவுக்கு பாதி விலையில் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மார்ச் - ஏப்ரல் 2021ம் ஆண்டுக்குள் ‘கோவிஷீல்டு’ மக்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. 2 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில் சேமிக்கக்கூடிய இந்த தடுப்பூசி, பொது மக்களுக்கு தனியார் சந்தையில் ரூ .500 முதல் 600 வரை கிடைக்கும் என்று சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பூனாவல்லா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவு, மருத்துவமனை இடிந்தது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.35 கோடியைக் கடந்தது
கழுத்தில் சங்கிலியை மாட்டி கணவரை நாய் போல் இழுத்து சென்றவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
டிரம்ப் பதவியை பறிக்க 25வது சட்டத்திருத்தம் துணை அதிபர் நடவடிக்கை எடுக்கக்கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்
உலகிலேயே முதல்முறையாக… ஒரு அதிபரின் டிவிட்டர், ஃபேஸ்புக் கணக்குகளை தொடர்ந்து யூடியூப் சேனலுக்கும் தடை விதிப்பு!!
அமெரிக்காவில் 1 மணி நேரத்திற்கு 170 பேர் கொரோனாவால் மரணம் :உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 9.19 கோடியை தாண்டியது!!!
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்