ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சரின் திட்டம் திடிரென ரத்து
2020-11-23@ 17:54:59
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாலை 5 மணிக்கு சந்திப்பதாக இருந்த திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆளுநரை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், 7 பேர் விடுதலையை பற்றி பேசுவார் என எதிர்பார்க்க பட்டிருந்த நிலையில் ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சரின் திட்டம் திடிரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்திப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக ஒவ்வொரு மாதமும் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் மேற்கொண்டுவரும் தடுப்புநடவடிக்கைகள் குறித்த ஆலோசனை போன்றவைகளுக்காக தமிழக ஆளுநரை சந்தித்து விரிவாக எடுத்து கூறுவர். அதன்படி இன்று மாலை சந்திப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அனைத்தது பத்திரிகை மற்றும் ஊடக துறையினர் வருகைதந்துள்ளனர்.
மேலும் முதல்வர் வரக்கூடிய வழிகள் முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். அங்கே அவர் வரக்கூடிய பிரதான நுழைவாயில் முன்பாக அடையாறு துணை ஆணையர் விக்ரமன் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சந்திப்பு ரத்தனதற்கான காரணங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மேலும் செய்திகள்
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு
வேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு
அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி
சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..!
சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..!!
தேர்தல் விதிமுறை அமல் அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படம் அகற்றம்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!