போலீஸ்காரர் காதலித்து ஏமாற்றியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை: வீடியோ பதிவில் வாக்குமூலம்
2020-11-23@ 00:18:44

பெரம்பூர்: வியாசர்பாடி ராஜிவ்காந்தி நகர் 19வது தெருவை சேர்ந்த ஜான் கென்னடி மகள் கிரேசி (17), மின்ட் பகுதியில் உள்ள கேட்டரிங் இன்ஸ்டிடியூட்டில் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். இவருக்கும், புழல் சிறையில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வரும், அரக்கோணத்தை சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன், முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த கிரேசியின் பெற்றோர், மகளை கண்டித்ததுள்ளனர். இதுபற்றி காதலன் மகேஷிடம் தெரிவித்த கிரேசி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார்.
ஆனால், தற்போது என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது, என்று அவர் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கிரேசி கடந்த 19ம் தேதி நள்ளிரவு தனது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கிரேசி வீடியோ பதிவில் வாக்குமூலம் அளித்தார். அதில், காதலன் மகேஷை சும்மா விடாதீர்கள். அவன் என்னை ஏமாற்றி விட்டான். என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி கிரேசி உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
எண்ணூர் குப்பத்தை சேர்ந்த அருள்மணி (40), நேற்று பிரார்த்தனைக்காக எண்ணூர் சத்தியவாணி முத்து நகர் 12வது தெருவில் உள்ள கிறிஸ்தவ சபைக்கு வந்தபோது, திடீரென 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மெக்கானிக் தற்கொலை
அரும்பாக்கம் ஜெய் நகரை சேர்ந்த ஏசி மெக்கானிக் வெங்கடேசன் (23), கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதை அவரது தந்தை நிர்மல்குமார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த வெங்கடேசன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டதுடன், தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே வெங்கடேசன் இறந்தார்.
மேலும் செய்திகள்
நாளை பள்ளிகளுக்கு போலாமா, வேண்டாமா?.....மாறி மாறி இரு அறிவிப்பால் மாணவர்கள் குழப்பம்
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்!: விசாரணை குழு நியாயமாக, நேர்மையாக விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் கோரிக்கை..!!
தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும் நிர்மூலமாக ஆக்கிய ஆட்சிதான் இந்த ஆட்சி..: மு.க.ஸ்டாலின் காணொலியில் பேச்சு
ஆல் பாஸ் எதிரொலி!: நாளை முதல் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்..!!
உயர் அழுத்த மின்சார கம்பி அருந்ததால் சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை துண்டிப்பு!: பொதுமக்கள் அவதி..!!
வெளிநாடுகளில் இருந்து ரூ.1331 கோடி நிலக்கரி இறக்குமதி டெண்டர் அறிவிப்பு தொடர்பாக பதிலளிக்க மின்வாரியத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்..!!
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்