SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடரும் குளறுபடிகள்

2020-11-23@ 00:08:35

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் தொகுதி வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வழக்கம்போல வாக்காளர்கள் பட்டியலில் குளறுபடிகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு, இறந்தவர்களின் பெயர்கள் மீண்டும் இடம்பெறுதல் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் காணப்படுகின்றன.

ஆண், பெண் பாலின பெயர்கள் மாற்றம், ஒருவருக்கு 2 வாக்காளர் பட்டியலில் இடம் உள்ளிட்ட குறைபாடுகள் இன்னமும் நீங்கியபாடில்லை. வாக்காளர்களின் முகவரி மாற்றத்திலும் பிரச்னைகள் நிலவுகின்றன. அரசியல் கட்சிகளின் கவனிப்புகளை கருத்தில் கொண்டு பலர், இறந்தவர்களின் பெயர்களை நீக்க மறுக்கின்றனர். தேர்தல் ஆணைய அதிகாரிகளே இறந்த நபர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வெளியூர்களுக்கு பிழைப்புக்காக சென்றவர்
களும், இன்னமும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை நீட்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் தொகுதிகள் தோறும் நடக்கும் சிறப்பு முகாம்களும் வெறும் கண் துடைப்புக்கு நடந்து வருகின்றன. அங்கு பெரும்பாலும் புதிய வாக்காளர்களின் பெயர் சேர்த்தல் மட்டுமே நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் காரணமாக பீகாரில் பல்வேறு கூத்துக்கள் அரங்கேறின. குறிப்பாக 50 முதல் 100 வாக்குகளில் சில தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் இருந்தது. அதிலும் பீகாரில் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட முறை இந்திய அளவில் கண்டனங்களை எழுப்பியுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டோர் தபால் வாக்குகளை பதிவு செய்திட வாய்ப்பு அளித்ததோடு, மாற்று திறனாளிகளும் தபால் முறையில் வாக்களித்தனர்.

இதில் ஏற்பட்ட குளறுபடிகள் ஏராளம். இந்திய ஜனநாயகம் இதுவரை வலியுறுத்தி வந்த நேர்மையான, சுதந்திரமான தேர்தலுக்கு விரோதமாக தபால் வாக்குமுறை அமைந்தது. இதில் மத்தியில் ஆளும் பாஜ உள்ளிட்ட கட்சிகளே அதிகளவில் பயன் அடைந்தன. மேலும் தேர்தல் அதிகாரிகள் வீட்டிற்கே சென்று மாற்று திறனாளிகளிடமும், முதியோர்களிடமும் வாக்குகளை பெற்று வரும்போது, ரகசிய வாக்குப்பதிவு என்ற அம்சமும் அர்த்தமற்று போய்விடுகிறது. தபால் ஓட்டுக்கள் இந்த கட்சிக்கே அதிகம் செல்கின்றன என்பதை பூத் லெவல் அதிகாரிகள் கணித்துவிட முடியும்.

மேலும் தபால் வாக்கு வசதிகளை கணக்கில் கொண்டு, முதியோர்கள் வாக்களிப்பதை காலதாமதம் செய்யவும், தள்ளிப்போடவும் வாய்ப்புகள் உண்டு. தமிழகத்தில் தேர்தலை கணக்கில் கொண்டு அடுத்தாண்டு வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதற்கு முன்பாக பல்வேறு குளறுபடிகள் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தோரின் எண்ணிக்கையில் கூடுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அரங்கேற்ற முயற்சிகள் நடக்கும். தமிழக சட்டசபைக்கு சுதந்திரமான தேர்தல் நடக்க வேண்டுமென்றால், அதற்கு குளறுபடியற்ற வாக்காளர் பட்டியல் அவசியமாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்