SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிவார் புயல் எதிரொலி...!! முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மொத்தம் 4,713 நிவாரண முகாம்கள் அமைப்பு; அமைச்சர் உதயகுமார் பேட்டி

2020-11-22@ 17:43:51

நெல்லை: தமிழகத்தில் நிவார் புயல் கரையை கடக்கும்போது 4,133 இடங்கள் பாதுகாப்பற்றவை என்று நெல்லையில் அமைச்சர் உதயகுமார் பேட்டியளித்துள்ளார். புயலின் தீவிரம் குறித்து கண்காணிக்க 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையம் சென்னையில் செயல்படுகிறது. நிவார் புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழு மண்டலமாக வலுப்பெற்று கரையை கடக்க உள்ளதாகவும், இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் இன்று விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 4,713 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  

மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளிலும், பாதுகாப்பற்ற பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் சென்று தங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இந்த நிவாரண முகாம்களில் உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதே போல, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் ஆகிய இடங்களில் 4,680 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 43,000 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்