SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏழை மாணவர்கள் MBBS செலவை திமுக ஏற்கும் அறிவிப்பிற்கு பெரும் ஆதரவு: டுவிட்டரில் #ThankYouMKStalin ஹாஷ்டேக் டிரெண்டிங்.!!!

2020-11-22@ 09:03:12

சென்னை: மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவித முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. இதற்கிடையே, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மாணவ,  மாணவியருக்கு அரசுக் கல்லூரிகளில் 227 எம்பிபிஎஸ் இடங்களும், பல் மருத்துவத்தில் 12 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருந்தன. இது தவிர தனியார் சுயநிதி கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. சுயநிதி  தனியார்  மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 86 சீட்டுகள் இருந்தன.

ஆனால் அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் கல்லூரி இடங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தவில்லை. சுயநிதி தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களில் சேர்ந்தால் ஆண்டு கல்விக் கட்டணம்(அரசு நிர்ணயம் செய்தது) குறைந்த  பட்சம் 3.50 லட்சம் முதல் 6 லட்சம் வரை உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களால் அந்த தொகையை செலுத்தி படிக்க முடியாது என்பதால் பல மாணவர்கள் அந்த இடங்களை எடுக்க முடியாமல், வேண்டாம் என்று எழுதிக் கொடுத்த சம்பவங்கள்  அரங்கேறின.

இதையடுத்து, மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள திமுக, இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை  முழுமையாக ஏற்கும் என்று மு.க.ஸ்டாலின் நேற்று அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து, 7.5% ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பல் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி, விடுதி கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும்  என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், ஏழை மாணவர்கள் மருத்துவப்படிப்பு செலவை திமுக ஏற்கும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக டுவிட்டரில் #ThankYouMKStalin என்ற ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது, இந்த  ஹாஷ்டேக் தமிழகத்தில் 2வது இடத்தில் உள்ளது. டுவிட்டரில் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் #ThankYouMKStalin  என்ற ஹாஷ்டேக் மூலம் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்