மாநகர செய்தி துளிகள்...
2020-11-22@ 02:39:41

கஞ்சா கடத்தியவர் கைது: மயிலாப்பூர் மீன் மார்க்கெட் நொச்சிகுப்பம் அருகே பைக்கில் கஞ்சா கடத்திய விருகம்பாக்கம் இளங்கோ நகர் கண்ணதாசன் நகரை சேர்ந்த சுப்பிரமணியை (50) போலீசார் கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நகை, பணம் திருட்டு: புளியந்தோப்பு கணேசபுரம் 11வது தெருவை சேர்ந்த மாநகராட்சி ஊழியர் ராஜேஷ் (38), வீட்டினுள் நேற்று முன்தினம் இரவு நுழைந்த மர்ம நபர்கள், ஒரு சவரன் நகை, ₹4 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
* கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவில் உள்ள காஸ் ஏஜென்சி அலுவலக பூட்டை உடைத்த மர்ம நபர்கள், ₹1.80 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
* சேலையூர் அடுத்த காமராஜபுரத்தை சேர்ந்த செந்தில் (50) வீட்டின் பூட்டை உடைத்து, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
போலீஸ்காரர் தற்கொலை: அம்பத்தூர் சண்முகபுரம் இந்திரா நகரை சேர்ந்த கணேஷ் (28), சிறப்பு காவல் படை காவலராக பணியாற்றி வந்தார். குடும்ப தகராறு காரணமாக மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வெல்டர் தீக்குளித்து தற்கொலை: போரூர் கெருகம்பாக்கத்தை சேர்ந்த வெல்டர் சந்துருவுக்கும் (36), திருவான்மியூர் மீன் மார்க்கெட் அருகே உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் கணவரை பிரிந்து தனியாக வசிக்கும் லட்சுமிக்கும் (43) கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பிரிந்து சென்ற கணவர் திரும்பி வந்ததால், சந்துருவிடம் பேசுவதை லட்சுமி தவிர்த்துள்ளார். இதில் மனமுடைந்த சந்துரு, லட்சுமி வீட்டிற்கு வந்து, தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேலாளரிடம் வழிப்பறி: செம்மஞ்சேரி பெட்ரோல் பங்க் மேலாளர் சரத்பாபு (29), ராஜீவ்காந்தி சாலையில் நடந்து சென்றபோது, ஷேர் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் கத்தி முனையில் இவரது செல்போன், 1,760 ரூபாய், வாட்ச் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
Tags:
மாநகர செய்தி துளிகள்மேலும் செய்திகள்
வேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு
அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி
சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..!
சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..!!
தேர்தல் விதிமுறை அமல் அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படம் அகற்றம்
குளத்தில் வீசப்பட்ட ஏடிஎம் கார்டுகள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!