SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எதிரொலி: கனமழையை எதிர்கொள்ள வசதியாக 4680 தற்காலிக முகாம்கள் அமைப்பு: அமைச்சர் உதயகுமார் பேட்டி

2020-11-22@ 01:10:25

சென்னை: கனமழை, அதிக கனமழை என எதுவாக இருந்தாலும் அதனை தொடர்ந்து கண்காணித்து உரிய  நடவடிக்கை மேற்கொள்ள அரசு அனைத்து  வகையிலும் தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில்  கனமழையை எதிர்கொள்ள அரசின் நடவடிக்கை குறித்த  ஆலோசனை கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில  அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று நடந்தது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டி: வடகிழக்கு  பருவமழையை எதிர்கொள்ள 36 வருவாய் மாவட்டங்கள், சென்னை  பெருநகர மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களும் உரிய தொடர் கண்காணிப்பு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வங்ககடலில் புதிய காற்றத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி,  நெல்லை, மதுரை, கோவை, விருதுநகர் ஆகிய மாவட்டத்தில் அதிகப்படியான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதனை கருத்தில் கொண்டு இந்த மாவட்டங்களுக்கு தனி கவனம் செலுத்தி இருக்கிறோம்.

சென்னை மாநகராட்சியில் ஆயிரம் இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. இந்த நிலை மாறி தற்போது 100 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கும்  இடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் நிவாரண முகாம்களுக்கு வர வேண்டும் என அரசின் சார்பில்  வேண்டுகோள் விடுத்து வருகிறோம். பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள், சமூகநல கூடங்கள் என தற்காலிக தங்கும் முகாம்கள் 4680 தயார்  நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாநில அவசர கட்டுப்பாட்டு மையம், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரம் தொடர்ந்து  செயல்பட்டு வருகிறது.

கனமழை, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28ம் தேதி அன்று தொடங்கியது. அன்று முதல் 20ம் தேதி(நேற்று முன்தினம்) வரை  இயல்பான மழையளவு 308.9 மி.மீ. ஆனால் 241.7 மி.மீ. அளவு மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான மழையளவைவிட 22 சதவீதம் குறைவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

* பருவமழை எதிர்கொள்ள 36 வருவாய்  மாவட்டங்கள், சென்னை பெருநகர மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு மூத்த ஐஏஎஸ்  அதிகாரிகள்  நியமிக்கப்பட்டு, அவர்களும் உரிய தொடர் கண்காணிப்பு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.
* சென்னை மாநகராட்சியில் ஆயிரம் இடங்களில்  தண்ணீர் தேங்கியிருந்தது. இந்த நிலை மாறி தற்போது 100 இடங்களில் மட்டுமே  தண்ணீர்  தேங்கும் இடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
* வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28ம்  தேதி அன்று தொடங்கியது. அன்று முதல் 20ம் தேதி வரை  இயல்பான மழையளவு 308.9 மி.மீ. ஆனால்  241.7 மி.மீ. அளவு மட்டுமே  பெய்துள்ளது. இது இயல்பான மழையளவைவிட 22 சதவீதம் குறைவாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்